சுரைக்காய் ஜுஸால் ஏற்படும் ஆபத்துகள்

0
31
bottle gourd juice

ஆரோக்கியமான காய்கறிகளில் ஒன்றாக சுரைக்காய் உள்ளது. சுரைக்காயில் பொட்டாசியம், வைட்டமின் சி இருப்பதால் உயர் ரத்த அழுத்தம், உடல் எடை ஆகியவற்றை குறைக்க உதவுகிறது. பல நன்மை தரும் காயாக இருந்தாலும் , சில பக்கவிளைவுகளையும் ஏற்படுத்துகிறது.

நீர்ச்சத்து அதிகம் மிகுந்த சுரைக்காயில் அதிக நன்மைகள் இருக்கின்றன என்பதற்காக அதிக அளவில் அதை எடுத்துக்கொள்ள கூடாது. இந்த சுரைக்காயின் கசப்பு மிகுந்த சாறை அருந்துவது ஆபத்து என ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஆபத்தான சுரைக்காய் சாறு

தாஹிரா காஷ்யப் என்பவர் பிரபல எழுத்தாளர், இயக்குனர் ஆவார். இவர் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது பதிவினை வெளியிட்டுள்ளார். இரண்டு பிள்ளைகளின் தாய் இந்த சுரைக்காய் சாறை குடித்ததால் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என அவர் கூறினார்.

சுரைக்காய் வீடியோவில் பல நன்மைகள் உள்ளதாக வலம் வந்துள்ளது. சுரைக்காய் சாற்றில் மஞ்சள் தூள், கொத்தமல்லி இலைகள், எலுமிச்சை, கருப்பு உப்பு சேர்த்து குடிப்பது கல்லீரலை சுத்தப்படுத்தும் என ஒரு வீடியோவில் வைரலாகி வந்துள்ளது.வீடியோக்கள் மற்றும் பதிவுகள் இந்த சுரைக்காய் சாறுகளுக்கு அனைத்து மொழிகளிலும் பரவி வருகிறது.

நன்மைகள்

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற குறைந்த கிளைசெமிக் குறியீடு இந்த சுரைக்காய் சாற்றில் காணப்படுகிறது. உடல் எடையை குறைக்கவும், செரிமானத்தை தூண்டவும், அஜீரண கோளாறுகளை நீக்கவும் இது உதவுகிறது. மருத்துவரின் ஆலோசனைப்படி உடல் எடையை குறைப்பவர்கள் குறிப்பிட்ட அளவு சுரைக்காய் ஜுஸை எடுத்து கொள்ளலாம்.

Bottle gourd Juice

நச்சுத்தன்மை மிகுந்த சுரைக்காய் சாறு

ஆய்வில் சுரைக்காய் சாறு மனித குடலில் நச்சுத்தன்மையை ஏற்படுத்தும் என கண்டறியப்பட்டுள்ளது. கசப்பாக இருக்கும் போது சாறை குடித்தால் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என தெரியவருகிறது. இதனால் இரைப்பை குழாயிலிருந்து ரத்தபோக்கு ஏற்பட்டதாகவும் தெரியவருகிறது.

மருத்துவ ஆலோசனை

வயிற்று வலி, குமட்டல், வாந்தி, வயிற்று போக்கு போன்றவை ஏற்பட்டால் உடனே அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும். இந்த நச்சுக்கு மாற்று மருந்து இல்லாததால் சாறை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here