DR green kodi to Simbu’s love! : சிம்புவின் காதலுக்கு பச்சைக்கொடி காட்டிய டி.ஆர்!

0
27

படங்கள்

மாநாடு திரைப்படம் சிம்புவிற்கு கம்பேக் கொடுத்த திரைப்படமாக அமைந்தது. கெளதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு, கொரோனா குமார் போன்ற திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

தோல்வி

2017 ஆம் ஆண்டு வெளியான அன்பானவன் அசாராதவன் அடங்காதவன் திரைப்படம் தோல்வியை தழுவியது. இந்த படத்திற்கு சிம்பு சரியாக ஒத்துழைப்பு தரவில்லை என்றும், ஷூட்டிங் நடத்தினாலும் சிம்பு வருவதில்லை என்றும் பல குற்றச்சாட்டுகளை AAA படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் கூறியிருந்தார்.

குற்றச்சாட்டு

சிம்புவின் மோசமான செயலால்தான் படம் தோல்வியை தழுவியது என்றும் குற்றம்சாட்டி இருந்தார். சிம்புவும் எதிலும் ஈடுபாடு இல்லாமல் ஒருபோதும் வீட்டை விட்டு வெளியே வராமல் மனஅழுத்தத்தில் இருந்துள்ளார்.

மாநாடு

சுசீந்திரன் இயக்கத்தில் கிராமத்து கதையான ஈஸ்வரன் திரைப்படத்தில் உடல் எடையினை குறைத்து ரசிகர்களை மகிழ்வித்தார். வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படத்தில் சிம்பு சிறப்பாக நடித்துள்ளார்.

காதல்

ஈஸ்வரன் படத்தில் சிம்புவுடன் நடித்த நிதி அகர்வாலை சிம்பு காதலித்து வருவதாக சோஷியல் மீடியாவில் பேசப்பட்டு வருகின்றன. நிதி அகர்வால் எஸ்டிஆரின் வீட்டில் வசித்து வருவதாகவும், இருவரும் ஒன்றாக அந்த வீட்டில் வாழ்ந்து வருவதாக தகவல்கள் பரவுகின்றன.

திருமணம்

சிம்பு வெந்து தணிந்தது காடு, பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பிசியாக இருப்பதாகவும், நிதியும் பவன் கல்யாணுடன் ஹரி ஹர வீர மல்லு படத்தில் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

பச்சைக்கொடி

இந்த திருமணத்திற்கு அவர்களது பெற்றோர்களும் பச்சைக்கொடி காட்டிவிட்டதாக கூறப்படுகிறது. ஒரு நல்ல நாளில் அறிவிப்புகள் வெளியிடப்படும் என்றும் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here