Indian players! : விராட் கோலியை மிஞ்சும் ஐந்து இந்திய வீரர்கள்!

0
58

விராட் கோலி

இந்தியா, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி அவரது கெரியரில் மோசமான நிலையை சந்தித்து வருகிறார். விராட் கோலி ஐபிஎல் 2022 ஆம் ஆண்டு ஒன்பது ஆட்டங்களில் வெறும் 128 ரன்களை மட்டும் அடித்து உள்ளார்.

திலக் வர்மா

இவர் இந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கிய வீரராக உள்ளார். 19 வயதான இவர் அவருடைய முதல் ஐபிஎல்லில் விளையாடுகிறார். எட்டு ஆட்டங்களில் 45 என்ற சராசரியுடன் 272 ரன்களை அடித்துள்ளார். இவர் ஆரஞ்சு கேப் பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளார்.

ஷாபாஸ் அகமது

போட்டிகளின் சூழ்நிலைகளுக்கு ஏற்ப ஐந்து, ஆறாவது இடத்தில் பேட் செய்யும் ஆல்-ரவுண்டர் ஷாபாஸ் அகமது , ஒன்பது போட்டிகளில் 195 ரன்கள் எடுத்துள்ளார். இந்த சீசனில் இவர் சராசரியாக 32.50 என்ற ரன் ரேட்டில் உள்ளார்.

அபிஷேக் ஷர்மா

இளம் வீரரான இவர் மீது அதிக நம்பிக்கையினை வைத்து பேட்டிங் செய்ய அனுப்பியது. இவர் எட்டு ஆட்டங்களில் 131.33 என்ற ரேட்டுடன் 285 ரன்களை எடுத்துள்ளார்.

ராகுல் திரிபாதி

ஐபிஎல் வரலாற்றில் மிகவும் குறைவாக மதிப்பிட்ட வீரர்களில் ஒருவர் ராகுல் திரிபாதி. ஹைதராபாத் அணிக்காக 3ஆவது இடத்தில் பேட்டிங் செய்த இவர் 8 ஆட்டங்களில் 228 ரன்கள் எடுத்துள்ளார்.

ராகுல் தெவாடியா

150 ரன்களுக்கு மேல் ஸ்ட்ரைக் ரேட்டில் பேட் செய்து குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக சில ஆட்டங்களை வென்று கொடுத்துள்ளார். கடைசி ஓவரில் எத்தனை ரன்கள் எடுத்தாலும், இவர் அணியில் இருந்தால் வெற்றி என்ற நம்பிக்கையில் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here