Gold prices! : தொடர்ச்சியாக மூன்று நாட்களாக குறைந்து வந்த தங்கம் விலை!

0
55

தங்கம் விலை குறைவு

தங்கம் விலையானது தொடர்ச்சியாக மூன்று நாட்களில் சவரன் 448 அளவுக்கு குறைந்துள்ளது. கடந்த சில மாதமாக ஏற்றம் இறக்கத்துடன் காணப்பட்ட தங்கம் விலை மீண்டும் குறைந்துள்ளது.

விற்பனை விலை

25 ஆம் தேதியன்று ஒரு சவரன் 38,792 ரூபாய்க்கு விற்கப்பட்டது. பின் 26 ஆம் தேதி சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 38,752 ரூபாய்க்கு விற்பனையானது. 27 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆதலால் அதே விலையில் தங்கம் விற்பனையானது.

நேற்று முன்தினம்

ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு தங்கம் மார்க்கெட் தொடங்கிய நிலையில் தங்கம் விலை சரிவை சந்தித்தது. கிராமுக்கு 28 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 4,816 ரூபாய்க்கும், சவரனுக்கு 224 குறைந்து ஒரு சவரன் 38,608க்கும் விற்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம்

நேற்று தங்கம் விலையானது கிராமுக்கு 23 குறைந்து ஒரு கிராம் 4,793 ரூபாய்க்கும், சவரனுக்கு 184 குறைந்து ஒரு சவரன் 38,344 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது. தொடர்ந்து 3 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு 448 குறைந்து நகை வாங்குவோரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here