The Price Of Gold தங்கத்தின் விலை சரிந்து; பவுனுக்கு ரூபாய் 38,120க்கு விற்பனை:

0
43
சென்னை:
இன்று சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 320
குறைந்து பவுனுக்கு 38,120க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலையும் குறைந்து ஒரு கிராம் ரூபாய் 66.00க்கு விற்கப்படுகிறது. அதே சமயம் அட்சயதிரிதியை முன்னிட்டு இரண்டு நாட்களுக்கு முன்பு தங்கத்தின் விலை ரூபாய் 856 குறைந்ததால் தங்கம் அளவுக்கு அதிகமாக விற்பனையாகியுள்ளது.

தங்கம் விற்பனை:

தங்கத்தின் விலை தற்போது ஏறுவதும், இறங்குவதுமாக உள்ளது.
கடந்த 18ம் தேதி தங்கம் விலை கிராமுக்கு ரூபாய் 4,739க்கும், சவரன் ரூபாய் 37,912க்கும் விற்கப்பட்டது. அதற்கு அடுத்தநாள் கொஞ்சம் அதிகரித்து கிராமுக்கு ரூபாய் 4,755, சவரனுக்கு ரூபாய் 128 ஆக உயர்ந்து ஒரு சவரன் ரூபாய் 38040க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த 20ம் தேதியும் தங்கத்தின் விலை அதிகமாக உயர்ந்து கிராமுக்கு ரூபாய் 24 ஆக அதிகரித்து ஒரு கிராம் ரூபாய் 4817க்கும் ஒரு சவரன் ரூபாய் 38,536க்கும் விற்கப்பட்டது.

நேற்றய தினம் சவரனுக்கு ரூபாய் 160 அதிகரித்து ஒரு சவரன் ரூபாய் 38,69 அதிகரித்து விற்கப்பட்டு வருகிறது. மேலும் தங்கத்தின் விலை
உயர்ந்திருப்பது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது
மேலும் சென்னையில் 22 கிராம் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து ரூபாய் 38, 120 ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது. மேலும் சென்னை யை பொறுத்தவரை சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலை 20 காசுக்கள் குறைந்து கிராம் 66.க்கு விற்பனை செய்யப்படுகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here