Government take action soon medical students! : மாணவர்கள் தமிழ் மருத்துவ படிப்பிற்கு அரசு விரைவில் நடவடிக்கை!

0
31

மா. சுப்ரமணியன் கூற்று

கொரோனா நான்காவது அலை ஜூன் மாதத்துக்கு பிறகு வரும் என கான்பூர் ஐஐடி நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா முற்றிலுமாக குறைந்து கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தினசரி தொற்று 100-க்கும் குறைவாக உள்ளது.

எச்சரிக்கை

சிங்கப்பூரில் தினமும் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோரும், நமது அண்டை மாநிலமான கேரளாவில் ஒரே நாளில் 847 நபரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது ஒவ்வொருவரின் அவசியம் ஆகும்.

தமிழ் வழியில் படிப்பு

தமிழக முதல்வர் தமிழ் வழிக்கல்விக்கு சிறப்பான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறார். உக்ரைனில் போர் காரணமாக அங்கு இருந்து திரும்பி வந்துள்ள மாணவர்களின் கல்விக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

கோரிக்கை

இந்தியாவிலேயே மருத்துவ கல்வியை தொடர வேண்டும் என்பது பெரும்பாலான மாணவர்களின் விருப்பமாக உள்ளது. போலந்து நாடுகளில் உக்ரைனில் இருக்கும் பாடத்திட்டம் உள்ளது. அங்கு அவர்களை அனுப்பி வைக்க சில மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மத்திய அரசு

மாணவர்களின் விஷயத்தில் முடிவு செய்ய வேண்டியது மத்திய அரசு ஆகும். அவர்கள் முடிவினை எடுத்ததும், மாணவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்யும் என முதலமைச்சர் உறுதியளித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here