Herbal insecticide! : மூலிகை பூச்சிவிரட்டி தயாரிக்கும் முறை!

0
61

மூலிகை பூச்சிவிரட்டி

பூச்சிகளை கட்டுப்படுத்த பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை விட அளவுகள் கூடும்போது அவை பயிர்களில் தங்கி விடுகிறது. பயிர்களுக்கு நன்மை செய்யும் பூச்சிகளையும் சேர்த்து அழிப்பதால் மூலிகை பூச்சிவிரட்டிகளை தயாரிப்பதே சிறந்ததாக கருதப்படுகிறது.

செடிகள்

தொட்டால் துர்நாற்றம் வீசும் ஊமம்,பீநாரி, வேம்பு,சோற்று கற்றாழை, எருக்கு,பப்பாளி,ஆடாதொடை,தும்பை, துளசி, நொச்சி, காட்டாமணக்கு, வேலிப்பருத்தி, வரிக்குமுட்டி,நித்தியகல்யாணி போன்ற செடிகளை கொண்டு பூச்சிவிரட்டிகளை தயாரிக்கலாம். இதில் நான்கு, ஐந்து இலைகளுடன் நெய்வேலி காட்டாமணக்கு செடியினை பயன்படுத்த வேண்டும்.

செய்யும் முறை

ஒரு சாக்கு இலைகளை சிறு துண்டுகளாக நறுக்கி இலைகள் மூழ்கும் அளவுக்கு தொட்டியில் கோமியம் சேர்த்து ஊறவைக்க வேண்டும். 10 நாட்களில் தாங்க முடியாத அளவுக்கு துர்நாற்றம் ஏற்பட்டால் பூச்சி விரட்டி தயாராகி விட்டதென அர்த்தம் ஆகும். ஒரு லிட்டர் கரைசலுடன் பத்து லிட்டர் அளவுக்கு தண்ணீர் சேர்த்து பயிர்களின் மீது தெளிக்க வேண்டும்.

கரைசலின் பயன்

குறிப்பிட்ட செடிகளின் இலை, காய்களை தின்னும் தாய் பூச்சிகள் இந்த கரைசலால் தாக்குப்பிடிக்க முடியாமல் போய்விடும். இந்த பூச்சிகள் பயிர்களின் மீது அமர்ந்து முட்டையிடுவது தவிர்க்கப்படுகிறது. இதனை இலை, தழைகளை கொண்டு செலவில்லாமல் தயாரிக்க முடியும். இதனால் சுற்றுப்புறத்திற்கு கேடுகள் எதுவும் இல்லை. காய்கறிகள், பழங்கள் போன்றவை சுத்தமாக காணப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here