Husband warm kept by the birth of baby girl! : பெண் குழந்தை பிறந்ததால் சூடு வைத்த கணவன்!

0
35

திருமணம்

மத்தியபிரதேச மாநிலம் டிவாஸ் மாவட்டத்தை சேர்ந்தவர் லெட்சுமி. இவருக்கு 22 வயது ஆகிறது. இவருக்கும், பப்லு ஜாலா என்பவருக்கும் 3 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமானது.

kutram

குழந்தை

இதற்கிடையில் லட்சுமி- பப்லு தம்பதிக்கு கடந்த ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. பப்லுவுக்கு பெண் குழந்தை பிறந்தது பிடிக்கவில்லை. அவரின் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் பிடிக்கவில்லை.

தாக்குதல்

kutram 4

பப்லு அவரது மனைவியை தொடர்ந்து கடந்த சில மாதமாக தாக்கியுள்ளார். பப்லுவின் குடும்பத்தினரும் லெட்சுமியை தாக்கியுள்ளனர்.

சூடு

கொடூரத்தின் உச்சமாக லெட்சுமியின் உடலில் அவரது கணவர், குடும்பத்தினர் இரும்பு கம்பியால் சூடு வைத்துள்ளனர். லெட்சுமியின் கைகள், கால்கள் போன்ற இடத்தில் சூடு வைத்துள்ளனர். பல நாட்களாக லெட்சுமியை அடித்தும் துன்புறுத்தி வந்துள்ளனர்.

கைது

இது குறித்து லெட்சுமியின் உறவினருக்கு தெரியவந்ததும் லெட்சுமியை உறவினர்கள் மீட்டுள்ளனர். லெட்சுமியின் உறவினர்கள் இதனை குறித்து போலீசில் புகாரினை அளித்துள்ளனர். இதனை குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் லெட்சுமியின் கணவர் குடும்பத்தினரை கைது செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here