Increased discount on gold sales now! : தங்கம் விற்பனையில் தற்போது அதிகரித்துள்ள தள்ளுபடி!

0
28

தங்கம்

தங்கத்தின் விலையானது நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து பார்க்கும் போது அதிகரித்து காணப்படுகிறது. அவ்வப்போது இவை சரிவினை கண்டாலும் நடப்பு ஆண்டில் சுமார் 15% மேலாக அதிகரித்துள்ளது.

இயல்பு நிலை

சமீப மாதங்களாக மட்டுமே தங்கத்தின் தேவையானது மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. உக்ரைன் பிரச்சனைக்கு மத்தியிலும், பணவீக்கம் காரணமாகவும் தங்கம் விலையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் எதிரொலியாக ஆபரண தங்கத்தின் விலையும் சவரனுக்கு 40,000 ரூபாயினை கடந்தது.

தள்ளுபடி

அதிகரித்து வரும் தங்கத்தின் விலையானது தற்போது சரிய தொடங்கியுள்ளது. இறக்குமதி வரி, ஜிஎஸ்டி ஆகியவை சேர்ந்து ஆபரண தங்கத்தின் விலை இன்னும் அதிகரிக்கிறது. விற்பனையை ஊக்குவிக்க தங்கம் விற்பனையயாளர்கள் இந்தியாவில் தள்ளுபடியை தற்போது அதிகரித்துள்ளனர்.

அச்சம்

தொடர்ந்து அதிகரித்து வரும் தங்கம் விலையானது அச்சத்தை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது. உள்நாடுகளில் விற்பனையை அதிகரிக்கும் விதமாக அதிகபட்சமாக 77 டாலர்கள் வரை தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளதாக கூறுகின்றன.

முந்தைய வார நிலவரம்

தள்ளுபடி விகிதமானது ஆறு ஆண்டுகளில் ஒரு நாளும் இல்லாத அளவுக்கு உச்சம் தொட்டுள்ளதாகவும், முந்தைய வாரத்தில் 27 டாலர்களாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. அதனுடன் ஒப்பிடும் போது கிட்டத்தட்ட இருமடங்கு தள்ளுபடி அதிகரித்துள்ளது. இந்திய நாட்டில் தங்கத்திற்காக இறக்குமதி வரி 10.75% + ஜிஎஸ்டி வரி 3% என விதிக்கப்படுகிறது.

பழைய தங்கம்

இந்த தள்ளுபடியால் விலை சற்று குறையலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் பழைய தங்கத்தினை வைத்திருப்பவர்கள் அந்த நகைகளை விற்பனை செய்ய தொடங்கியுள்ளதாகவும் தரவுகள் கூறுகின்றன.

பற்றாக்குறை

அதிகளவில் இறக்குமதி செய்யப்படும் தங்கம் ஆனது நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறையை ஊக்குவிக்கலாம் என தெரிகிறது. ஏப்ரல்- பிப்ரவரி மாதத்தில் மட்டும் தங்கமானது 73% அதிகரித்து 45.1 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.

பிப்ரவரி

கடந்த பிப்ரவரி மாதத்தில் தங்கத்தின் இறக்குமதி 11.45% குறைந்து வந்து தற்போது 4.7 பில்லியன் டாலராக குறைந்துள்ளது. சீனாவினை அடுத்து இரண்டாவது பெரிய தங்க இறக்குமதி நாடாக இந்தியா உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here