ஆண்களை விட பெண்கள் எண்ணிக்கை அதிகம் – சுகாதாரத்துறை அறிவிப்பு

0
92

தற்போது 1000 ஆண்டுகளுக்கு 1020 பெண்கள் இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்திய மக்கள் தொகையில் இதுவே முதல் மிகப்பெரிய மாற்றமாக கருதப்படுகிறது.

தேசிய குடும்ப மற்றும் சுகாதார சர்வே 2019 – 2021 என்ற வருடத்தில் இரண்டு கட்டமாக நடத்தி முடிக்கப்பட்டது.

முதல் கட்டத்தில் 10 மாநிலங்கள் இரண்டாம் கட்டத்தில் 12 மாநிலங்கள் என மொத்தம் 22 மாநிலங்களில் இந்த சர்வே எடுக்கப்பட்டது.

சிறிய சர்வே

மொத்த சர்வே படி இந்தியாவில் 1000 ஆண்களுக்கு 1020 பெண்கள் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது சிறிய அளவிலான சாம்பிள் சர்வே என்றும் மொத்த இந்தியாவின் இறுதி மக்கள் தொகை விவரம் கிடையாது என்றும் தெரியவந்துள்ளது.எத்தனை ஆண்களுக்கு எத்தனை பெண்கள் இருக்கிறார்கள் என்ற விவரம் மொத்த தேசிய மக்கள் தொகை விவரம் மூலம் தெரிய வரும்.

பெண்கள் அதிகம்

இந்தியாவின் மக்கள் தொகை குறித்த இமேஜை சுகாதார சர்வே முடிவுகள் கொடுத்துள்ளது. சர்வே படி பெண்கள் அதிகம் என்றும் ஆண்கள் குறைவு என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது. பெண்கள் குறைவான நாடு என்று அமர்த்தியா சென் வர்ணித்தது போல இந்தியாவை வர்ணிக்க முடியாது என கூறுகிறார்கள்.

இந்திய கணக்கெடுப்பு

1990 ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் இந்தியாவில் 1000க்கு 927 பெண்கள் மட்டும் இருந்தனர். 2005-2006 கணக்கெடுப்பின் படி 1000க்கு 1000 என்ற அளவில் பெண்கள் இருந்தனர். 2015-2016 ம் ஆண்டுகளில் 1000 க்கு 991 பெண்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது ஆண்களை விட பெண்கள் அதிகம் இருப்பது கண்டுபிடிக்கபட்டுள்ளது.

பெண் குழந்தைகள்

தேசிய அளவில் நடத்தப்படும் கணக்கெடுப்பில் உண்மையான புள்ளி விவரங்கள் தெரியும் என்றாலும் சுகாதார சர்வே மூலம் பெண்கள் எண்ணிக்கை ஆண்களை விட உயர்ந்துள்ளது உறுதியாகி உள்ளது.இதன் மூலம் பெண் குழந்தைகள் பிறப்பு மீதான கண்ணோட்டம் மாறியது உறுதியானது. கடந்த 5 வருடமாக பெண் குழந்தைகள் எண்ணிக்கை உயரவில்லை.

வாழ்நாள் சதவிகிதம்

இந்தியாவில் கடந்த 5 வருடமாக 1000 ஆண்களுக்கு 929 பெண்களே பிறந்து உள்ளனர். அதற்கு முன்னதாகவே பிறந்த பெண் குழந்தைகளின் எண்ணிக்கையை வைத்து இது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் ஆண்களின் வாழ்நாள் 66.4 சதவிகிதமும், பெண்களின் வாழ்நாள் 69.6 சதவிகிதமாகவும் உள்ளது.

குழந்தைகள் பிறப்பு குறைவு

10 வருடத்திற்கு முன்பாக 15 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் 34.9% ஆக இருந்த நிலையில், தற்போது 26.5% உள்ளதாக தெரியவருகிறது. வடஇந்தியாவை விட தென்னிந்தியாவில் வயது குறைவானவர்கள் இருக்கிறார்கள். இதனால் தென்னிந்தியாவில் குழந்தைகள் பிறப்பு குறைந்துள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here