Airport! : விமான கட்டணம் உயர்த்தப்படுவதாக தகவல்! தமிழர்களுக்கு அதிர்ச்சி!

0
81

அதிர்ச்சி

தமிழகத்திலிருந்து பணிக்காகவும், சுற்றுலாவாகவும் பலர் அமீரகம், கத்தார்,சவுதி அரேபியா ஆகிய நாடுகளுக்கு விமானங்களில் பயணிக்கிறார்கள். விமான டிக்கெட்டுகளில் ஏற்படும் ஏற்றம் இவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

விமான சேவைகள்

தமிழகத்தை பொறுத்தவரை சென்னை, மதுரை, திருச்சி, கோவை பகுதிகளிலிருந்து வளைகுடா நாடுகளுக்கு நேரடியாக விமான சேவைகள் உள்ளன. இதில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. இந்த பயண டிக்கெட் விலை அதிகரிப்புகள் ஜூலை 1 முதல் அமலுக்கு வருவதாக நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

கட்டணங்கள்

தற்போது திடீரென தமிழகம் உட்பட தென் இந்தியாவில் இருந்து அரபு நாடுகளுக்கு செல்லும் விமான கட்டணங்கள் இரு மடங்கு அதிகரித்துள்ளது. சென்னை- அபுதாபி, திருவனந்தபுரம் -துபாய், கொச்சி -துபாய் ஆகிய விமான டிக்கெட்டுகள் உயர்த்தப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here