Is China helping Ukraine? : யுக்ரேனுக்கு சீனா உதவுகிறதா! வெளியான தகவல்!

0
105

நாளிதழ்

யுக்ரேனில் போரை நடத்துவதற்காக சீனாவிடம் ராணுவ, பொருளாதார உதவிகளை ரஷ்யா கோரி வருவதாக நாளிதழ்கள் செய்தி ஒன்றை வெளியிட்டிருக்கின்றன.

உதவி

யுக்ரைன் போரில் பயன்படுத்தும் வகையில் ராணுவ தளவாடங்களை சீனா வாங்க வேண்டும் என ரஷ்யா விரும்புகிறது. ரஷ்யாவின் கோரிக்கையை ஏற்று அந்த நாட்டுக்கு உதவி செய்ய தயாராகி வருவதாக அறிகுறிகள் தென்படுவதாக செய்திகள் கூறுகின்றன.

பேச்சுவார்த்தை

ரஷ்யா- யுக்ரேன் மோதலில் சீனா இதுவரை நடுநிலை வகிப்பதாக காட்டுவதற்கே முற்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை நடுநிலை வகுத்து ரஷ்யாவின் படையெடுப்பை இதுவரை வெளிப்படையாக கண்டிக்கவில்லை. அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர், சீன வெளியுறவு கொள்கை அதிகாரியுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சல்லிவன் கூற்று

ரஷ்யா மீதான பொருளாதார தடைகளால் ஏற்படும் சிக்கல்களை சீனா, வேறு யாரும் ஈடுசெய்ய முடியாது என்பதை அமெரிக்கா உறுதி செய்யும் என கூறினார்.

சீனாவின் நோக்கம்

யுக்ரேனில் நடைபெறும் போர் கட்டுப்பாடு இல்லாமல் போவதை தடுப்பதே சீனாவின் நோக்கம் என செய்தி தொடர்பாளர் கூறினார். யுக்ரேனின் நிலைமை உண்மையில் அதிருப்தி அளிப்பதாக செய்தி தொடர்பாளர் லியு பெங்யு கூறியுள்ளார்.

முன்னுரிமை

இப்போது பதற்றமான சூழ்நிலை அதிகரிப்பதையோ, கட்டுப்பாட்டை மீறுவதையோ தடுப்பதற்கே முன்னுரிமை அளிப்பதாக அவர் கூறினார். ரஷ்யாவின் பொருளாதார தடைகளை மீற சீனா நடவடிக்கை எடுத்தால் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்க அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நடவடிக்கை

சீனாவிடம் ரஷ்யா ராணுவ உதவி கேட்பதாக வெளியாகியிருக்கும் தகவல்களை அதிகாரபூர்வமாக அறிவிப்பதற்கு அமெரிக்கா திட்டமிட்டிருக்கிறது. சீன நாட்டிற்கு அழுத்தம் கொடுக்கும் நடவடிக்கையாக இது உள்ளது.யுக்ரேனுக்கு பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆயுதம் வழங்குவதை சீனா கண்டித்துள்ளதால் ஆயுதம் வழங்கினால் நிலைமையை மோசமாக்கும் என நிபுணர்கள் கருதுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here