Simbu-Samantha! : சிம்புவின் படத்தில் சமந்தா நடிக்கிறாரா?

0
68

சிம்பு

மாநாடு படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு தமிழ் சினிமாவில் பிஸியான நடிகராக மாறியவர் சிம்பு. கடந்த சில ஆண்டுகளாக சினிமாவில் சிம்புவின் மீது பல குற்றச்சாட்டுகள் எழுந்தது. உடல் எடையில் கவனம் செலுத்தாமல் மிகவும் குண்டாகவும் காணப்பட்டார். பின்னர் உடல் எடையை குறைத்து ஈஸ்வரன் படத்தில் நடித்து முடித்தார்.

படங்கள்

சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு படம் அதிக வசூலை பெற்றது. தற்போது கௌதம் வாசுதேவ் மேனன் உடன் மூன்றாவது முறையாக வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் நடித்து வந்தார்.

பாடல்

வரும் மே மாதம் 6ஆம் தேதி இந்த படத்தில் இருந்து முதல் பாடல் வெளியாக உள்ளது. வெந்து தணிந்தது காடு படத்தின் ஒரு பதிவில் சமந்தாவை டேக் செய்ததாக தெரிகிறது. படத்திற்கான விளம்பரங்களின் போது படத்தில் நடித்தவர்களை மட்டுமே டேக் செய்வதுண்டு.

சமந்தா

இந்த படத்தில் சமந்தாவை எதற்கு டேக் செய்தார்கள் என்று ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். ஒருவேளை சமந்தா இந்த படத்தில் நடித்திருப்பாரோ என அனைவரிடமும் சந்தேகம் தற்போது எழுந்துள்ளது. விரைவில் இதனை குறித்த தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here