Journalists killed in Ukraine war! : உக்ரைன் போர் செய்திகளை சேகரிக்க சென்ற செய்தியாளர்கள் பரிதாபமாக உயிரிழப்பு!

0
28

உயிரிழப்பு

உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் 20 ஆவது நாளாக நீடித்து வருகிறது. இந்த நிலையில் உக்ரைனில் தனியார் செய்தி நிறுவனத்தின் பெண் செய்தியாளர் சாஷா, ஒளிப்பதிவாளர் பியர் ஜாக்ர்ஸெவஸ்கி ஆகியோர் உக்ரைன் தலைநகர் கீவ் நகருக்கு வெளியே உயிரிழந்துள்ளனர்.

ukraine russia 1 1

விபத்து

போர் செய்தி சேகரிப்புக்காக அவர்கள் பயணம் மேற்கொண்டிருந்தனர். அப்போது அவர்களது வாகனம் போர் தாக்குதலால் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கியது. அந்த வாகனத்தில் சென்றுகொண்டிருந்த இருவரும் உயிரிழந்தனர்.

Benjamin Hall 2

மருத்துவமனை

அவர்களுடன் பயணம் மேற்கொண்டிருந்த இங்கிலாந்தை சேர்ந்த பெஞ்சமின் ஹால் என்ற நிருபர் உக்ரைன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

துப்பாக்கி சூடு

ஆவணப்பட தயாரிப்பாளரான ப்ரென்ட் ரெனாட் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ரஷிய படைகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் உயிரினை இழந்துள்ளார்.

ukraine athibar 2

குழந்தைகள்

உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்து இதுவரை 97 குழந்தைகள் கொல்லப்பட்டதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி என்பவர் தெரிவித்துள்ளார். உக்ரைனின் மரியுபோல் நகரில் இருந்து சுமார் 20.000 பேர் வெளியேறி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here