Latest Chennai News 2022 : முகக்கவசம் முழுமையாக அணியாவிட்டால் 500ரூபாய் அபராதம்!

0
61
mask

முகக்கவசம்

சென்னையில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு 500 ரூபாய் அபராத கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வாய்,மூக்கு முழுமையாக அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி அனைவரிடமும் எச்சரித்துள்ளது.

திருத்தம்

அனைவரையும் முகக்கவசம் அணிய வைக்கவும், கொரோனா மக்களிடையே பரவும் வேகத்தை குறைக்கவும் சுகாதார சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அந்த சட்டத்தின் படி முகக்கவசம் அணியாதவர்களுக்கு 200 லிருந்து 500 வரை அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

ரசீது

சென்னையில் 200 ரூபாய் அபராதத்திற்கான ரசீது இருந்ததால் அவற்றை மாற்றி 500 ரூபாயாக அச்சிட மாநகராட்சி கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். ரசீதுகள் தயாராக உள்ளதால் முகக்கவசம் அணியாதோருக்கு இன்று முதல் 500 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என மாநகராட்சி அறிவித்துள்ளது.

அதிகாரிகள் கூற்று

சிலநாட்களாக கொரோனா குறைந்து வருவதால், இவற்றை மேலும் குறைக்க முகக்கவசம் அணிய வேண்டும். அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் அவர்கள் கூறினார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here