Latest Tamil News 2022 : அதிகமாக வெள்ளம் பாதித்த பகுதிகளில் வடிகால்கள் அமைக்க ஒப்பந்தம்!

0
63
Drains

மழை நீர்

சென்னை மாநகராட்சியில் கடந்த ஆண்டு மழைபொழிவால் மாநகர் முழுவதும் வெள்ளக்காடானது. ராயபுரம் மண்டலத்தில் , திருவள்ளூர் நகர், கோல்டன் காம்ப்ளஸ் போன்ற பல இடங்களில் அதிக அளவில் மழைநீர் தேங்கியது.

சீர்கேடு

கோடம்பாக்கத்தில் மாம்பலம்,தி நகர், அசோக் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் தேங்கி வடிய பல நாட்கள் ஆனதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதுடன் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது.

கமிட்டி

வெள்ள பாதிப்புகள் குறித்து அதிகாரி திருப்புகழ் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. சென்னையில் பல்வேறு இடங்களில் ஆய்வுகள் செய்து பணிகள் குறித்து அறிக்கையை சமர்ப்பித்தது.

பாதிக்கப்பட்ட இடங்கள்

பருவமழையின் போது அதிகம் பாதிக்கப்பட்டுள்ள ராயபுரம், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் போன்ற இடங்களில் மழைநீர் வடிகால்வாய் அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதனை அமைக்க 187கோடி ரூபாயில் பணிகளை முடிக்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here