Latest Tamil News 2022 : ஆப்கானிஸ்தானில் வறுமையை சரிசெய்ய மேற்கத்திய நாடுகள் ஆலோசனை!

0
57

அதிகாரம்

தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் விலக்கியதையடுத்து தலிபான் பயங்கரவாதிகள் கையில் அதிகாரம் சிக்கியுள்ள நிலையில் பெண்கள் மீதான வன்முறை, தாக்குதல் அதிகரித்து உள்ளன.

பஞ்சம்

தலிபான்கள் ஆட்சியை பிடித்ததால் ஆப்கனுக்கு செய்து வந்த உதவிகளை மேற்கத்திய நாடுகள் நிறுத்திவிட்டன. இதன் காரணமாக அங்கு கடும் உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ளதால், மக்கள் பசி,பட்டினியால் வாடி வருகிறார்கள்.

இந்தியா

ஆப்கனுக்கு 50 ஆயிரம் டன் கோதுமை வழங்க இந்தியா மட்டும் சம்மதித்துள்ள நிலையில் உணவு பஞ்சத்தை சமாளிக்க தங்களுக்கு உதவ வேண்டும் என பல நாடுகளிடம் தலிபான்கள் கெஞ்சி வருகின்றனர்.

கூட்டம்

ஆப்கனுக்கு உதவிகள் செய்வது பற்றி ஐரோப்பிய நாடான நார்வே தலைநகர் ஆஸ்லோவில் ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளனர். இதில் பல நாட்டின் மேற்கத்திய தூதர்கள் பலர் பங்கேற்றனர். மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த கூட்டம் நிறைவு பெற்றுள்ளது.

அமைச்சர் முட்டகி கூற்று

இதுபோன்ற கூட்டங்களில் பங்கேற்பதன் வழியாக மற்ற நாடுகளுடன் நாங்கள் நெருங்க முடியும் என நம்புவதாகவும், ஆப்கனுக்கு நாடுகள் உதவி செய்யும் என நம்புகிறோம் என கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here