Latest Tamil News 2022 : இந்தி எதிர்ப்பு போராட்டம் தியாகிகள் தினமாக மாற்றம் செய்யப்பட்ட தகவல்!

0
58
hindhi

இந்தி

1948 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்தி கட்டாயமாக்கப்படுவது குறித்து சென்னை மாகாண அரசு அறிவித்தது. சென்னை மாகாணத்தில் இருந்த ஆந்திர, கேரள,கர்நாடக பகுதிகளில் இந்தி கட்டாயமென்றும், தமிழ்நாடு பகுதிகளில் விருப்ப பாடமென்றும் அறிவிக்கப்பட்டது.

சட்டம்

இந்திய அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டபோது ஆட்சி மொழியாக எதை பயன்படுத்துவது என நீண்ட விவாதம் ஏற்பட்டது. இந்தி பேசாத மாநிலங்களுக்கு அதனை கற்றுக்கொள்ள 15 ஆண்டு காலம் அவகாசம் அளிப்பது எனவும், 1965 முதல் இந்தியை ஆட்சி மொழியென அறிவிக்கலாம் என தீர்மானிக்கப்பட்டது.

எதிர்ப்பு

பல எதிர்ப்புக்களை மீறி 1963 ஏப்ரல் 23ஆம் தேதி இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டது. எதிர்ப்பு குரல்கள் ஒலித்த நிலையில் முதலமைச்சராக இருந்த பக்தவச்சலம் மும்மொழி கொள்கை அறிமுகப்படுத்தப்படும் என அறிவித்தார்.

அண்ணாதுரை

குடியரசு தினத்தை கொண்டாட ஏதுவாக மொழி மாற்ற தினத்தை தள்ளிவைக்க அண்ணாதுரை கோரினார். ஜனவரி 25 துக்க தினமாக அறிவித்து அன்றைய தினத்தில் அண்ணாதுரையையும் திமுக போன்றவர்களை தடுப்பு காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மதுரை

மதுரையில் நடந்த ஊர்வலத்தில் வடக்கு மாசி வீதியில் மோதல் ஏற்பட்டதால் அலுவலக பந்தல் தீ வைத்து கொளுத்தப்பட்டது. மாநிலம் முழுவதும் கலவரம் பரவ ஆரம்பித்தது.

முடிவு

பிரவரி 11 உரையாற்றிய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி நேருவின் வாக்குறுதி நிறைவேற்றப்படும் என உறுதியளித்தார். இதனை தொடர்ந்து போராட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டன.

போராட்டம்

போராட்டம் துவங்கிய ஜனவரி 25 ஆம் தேதியை தொடர்ந்து பல இடங்களில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தில் ஒட்டுமொத்தமாக 70 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

தியாகிகள் தினம்

தமிழ்நாட்டில் 1967ல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் தோற்கடிக்கப்பட்டு திமுக ஆட்சி பிடிக்க இந்த போராட்டம் முக்கிய காரணமாக அமைந்தது. சின்னசாமி தீக்குளித்து உயிரிழந்த ஜனவரி 25 ஆம் நாளை மொழி போர் தியாகிகள் தினமாக அனுசரித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here