Latest Tamil News 2022 : ஏழு மாவட்டங்களில் 30,000ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு!

0
55
corona

பாதிப்பு

தமிழ்நாட்டில் ஓமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 29,744 பேருக்கு பாதிப்புகள் உறுதியாகியுள்ளது தெரியவந்துள்ளது.

விவரம்

ஒரே நாளில் 23,322 பேர் தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு சென்றுள்ள நிலையில் 35 பேர் உயிரிழந்துள்ளனர். மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 31 லட்சத்து 3,412 ஆக உள்ளது.

சென்னை

ஆறாவது நாளாக சென்னையில் கொரோனா பாதிப்பு குறைவாக பதிவாகியுள்ள நிலையில் மற்ற மாவட்டங்களில் கொரோனா அதிகரிக்க தொடங்கியுள்ளது.

தொற்று

சென்னையில் மொத்தம் 6,321 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவையில் 3,222பேர், செங்கல்பட்டில் 2,111பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 38 மாவட்டங்களில் முந்தைய நாளுடன் ஒப்பிடும் போது 30 மாவட்டங்களில் பாதிப்புகள் அதிகரித்துள்ளன.

குறைவு

சென்னை, மதுரை, விருதுநகர் போன்ற மாவட்டங்களில் கொரோனா தொற்று குறைய தொடங்கியுள்ளது. தூத்துக்குடி, திருச்சி போன்ற மாவட்டங்களில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

சுகாதாரத்துறை தகவல்

இறந்த 33 பேரில் 27 பேர் 60 வயதினை கடந்தவர்கள் என்றும், தினசரி தொற்று பாதிப்பு விகிதம் 20.4சதவீதமாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here