Latest Tamil News 2022 : ஐந்து நாட்களாக அச்சுறுத்தி வந்த சிறுத்தை கூண்டில் மாட்டியது!

0
62
leopard

கோவை குனியமுத்தூர் பகுதியில் 5 நாட்களாக குடோனில் பதுங்கி இருந்த சிறுத்தை கூண்டிற்குள் வந்த போது வன ஊழியர்கள் கூண்டை மூடி சிறுத்தையை பிடித்தனர்.

பதுங்கல்

கோவை மாவட்டம் வனப்பகுதியில் இருந்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியேறிய மூன்று வயது ஆண் சிறுத்தை குடோனில் பதுங்கி கொண்டது. இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்க பல முயற்சிகள் மேற்கொண்டனர்.

முயற்சி

குடோனை சுற்றி வலை விரித்தும், கூண்டுகள் வைத்தும் சிறுத்தையை பிடிக்க முயற்சிகள் எடுக்கப்பட்டன. மேலும், கேமரா மூலம் சிறுத்தையின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டது.

எச்சரிக்கை உணர்வு

கூண்டினை வைத்து 5 தினங்களாக வனத்துறையினர் காத்திருந்த போதிலும் கூண்டில் சிக்காமல் சிறுத்தை சுற்றி திரிந்தது. கோவை வனத்துறையினரும் தானாக கூண்டில் வந்து சிக்கும் வரை பொறுமையுடன் இருந்தனர். சிறுத்தை புத்திசாலித்தனமாக எச்சரிக்கை உணர்வுடன் வராமல் இருந்தது.

சிக்கியது சிறுத்தை

6 வது நாளில் குடோன் வாயிலில் வைக்கப்பட்டிருந்த கூண்டு பகுதிக்கு சிறுத்தை வந்துள்ளது. இதனை கண்காணித்த வனத்துறையினர் சிறப்பாக செயல்பட்டு கூண்டின் கதவை அடைத்ததால் சிறுத்தை சிக்கி கொண்டது.

திட்டம்

தலைமை வனப்பாதுகாவலர் சம்பவ இடத்திற்கு வந்து வனத்துறையினரின் செயலை பாராட்டினார். சிறுத்தையை பாதுகாப்பாக வனப்பகுதிக்குள் கொண்டு விட திட்டமிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here