Latest Tamil News 2022 : கூண்டிலிருந்து உற்சாகத்துடன் குதித்தோடிய சிறுத்தை !

0
61
Leopard

முயற்சி

குனியமுத்தூரில் சிறுத்தை ஓன்று பாழடைந்த கிடங்கு ஒன்றில் புகுந்தது. வனத்துறையினர் அங்கு சென்று அதனை பிடிக்கும் முயற்சிகளை மேற்கொண்டனர். சிறுத்தை புகுந்த கிடங்கு ஆறு அறைகளை கொண்டதால் மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையை பிடிப்பதில் சிரமங்கள் இருந்தன.

சிறுத்தை

நுழைவாயில்களில் கூண்டு வைத்து காத்திருந்தும் 5 நாட்களாக சிறுத்தை பிடிபடாமல் போக்கு காட்டிக்கொண்டு இருந்தது. உணவு, தண்ணீர் இன்றி தவித்த சிறுத்தை கிடங்கில் வைக்கப்பட்ட கூண்டுக்குள் நுழைந்த போது வனத்துறையினர் சிறை பிடித்தனர்.

உடல்நிலை

மருத்துவர்களால் சிறுத்தையின் உடல்நிலை ஆய்வு செய்யப்பட்ட நிலையில் தண்ணீர் கொடுத்து வனப்பகுதிக்குள் சிறுத்தை விடப்பட்டது. கூண்டிலிருந்து சிறுத்தை காட்டில் விடுவிக்கப்பட்டதும் உற்சாகத்துடன் குதித்தோடியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here