Latest Tamil News 2022 : தடுப்பு மருந்து செலுத்திக்கொள்ள மறுத்ததால் அறுவை சிகிச்சை செய்ய மறுத்த மருத்துவமனை!

0
56
america

கொரோனா

அமெரிக்காவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தாக்கம் காரணமாக 8 லட்சத்து 21 ஆயிரம் பேர் மரணமடைந்துள்ளனர். 6 கோடி பேர் வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளதால் 62 சதவீத குடிமக்கள் இரண்டு டோஸ் தடுப்பு மருந்தை பெற்றுள்ளனர்.

சிடிசி

முக்கிய உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கு அமெரிக்காவில் உள்ள மருத்துவமனைகளில் தடுப்பு மருந்துகள் தயார் நிலையில் வைக்கப்பட வேண்டும் என சிடிசி உத்தரவிட்டிருந்தது. தடுப்பு மருந்து தொடர்பான மூட நம்பிக்கையால் சிலர் இவற்றை செலுத்த தயங்கி வருவதால் ஒரு நோயாளிக்கு ஏற்பட்ட பின்விளைவு விபரீதமாகி உள்ளது.

மருத்துவமனை

பாஸ்டன் நகரில் இருதய மாற்று சிகிச்சை செய்ய வந்த நோயாளிக்கு இரண்டு டோஸ் தடுப்பு மருந்து செலுத்தாததால் நிர்வாகம் இந்த அறுவை சிகிச்சையை மேற்கொள்ள மறுத்துவிட்டது.

நிர்வாகம்

இருதயத்தை மாற்றிய பின்னர் நோய் எதிர்ப்பு சக்தி கணிசமாக குறையும் என்றும், அறுவை சிகிச்சை செய்தால் வைரஸ் தாக்கம், நோயாளியின் உடலில் மரணத்தையும் ஏற்படுத்தக்கூடும் என்பதால் இந்த முடிவினை எடுத்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

நோயாளியின் தந்தை

இருதய மாற்று அறுவை சிகிச்சைக்காக 31 வயதாகி அவருடைய மகன் காத்திருந்ததாக டேவிட் பேர்சன் தெரிவித்துள்ளார். மருத்துவமனை தடுப்பு மருந்து செலுத்த முயன்ற போது அவர் அதனை மறுத்துவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here