Latest Tamil News 2022 : தமிழகத்தில் முதல் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது : அவிழ்த்து விடப்பட்ட காளைகள் சீறிப்பாய்ந்தன

0
59
gg

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவுவதன் காரணமாக பல கட்டுப்பாடுகளுடன் இந்த போட்யை நடத்திவருகிறார்கள்.

கொரோனா

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததால் ஜல்லிக்கட்டு நடத்தப்படுமா? என்ற கேள்வி ஏழுதுள்ளது நிலையில் பல கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என்று அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி

காளைகள், மாடுபிடிக்கும் வீரர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை ஆனால் போட்டியில் பங்கேற்பவர்கள் கட்டாயம் 2 தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் .

விண்ணப்பங்கள்

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை 8 விண்ணப்பங்கள் அனுப்பியுள்ளார்கள். கிராமங்களில் ஜல்லிக்கட்டு விழாக்கள் நடத்தப்பட மற்றும் நெறிமுறைகளை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டது.

ஜல்லிக்கட்டு

இங்கு ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகை யொட்டி ஜல்லிக்கட்டு நடத்துவார்.

பொங்கல்

பொங்கலுக்கு முதல் நாள் போகியன்று ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கொடுத்தனர்.இங்கு 300 காளைகளும் பதிவு செய்யப்பட்டன. அதே போல் 700 மாடுபிடிக்கும் வீரர்கள் அவர்களின் பெயர்களை பதிவு செய்திருந்தனர்.

பரிசுகள்

வாடிவாசலில் இருந்து மிகவும் பாய்ந்து வந்த காளைகளை திமிலை பிடித்து அடக்கினார்கள். இதில் பல காளைகள் அவர்களின் பிடியில் சிக்காமல் விளையாட்டு காட்டின. காளைகளை அடக்கிய வீரர்ருக்கு கட்டில் மற்றும் பீரோ, சைக்கிள் என பல பரிசுகள் வழங்கப்பட்டன.160 போலீசார் பணியில் ஈடுபட்டனர்.

ஆம்புலன்சு

ஜல்லிக்கட்டு விழாவில் விதிமீறல்கள் இல்லாமல் கண்காணிக்க குழு அமைக்கப்பட்டிருந்தது மேலும் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடம் அருகே ஆம்புலன்சு நிறுத்தப்பட்டிருந்தன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here