Latest Tamil News 2022 : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் செய்யக்கூடாத சில விஷயங்கள்!

0
62
election

வேறுபாடுகள்

ஜாதிகள், சமூகத்தினர்,மதத்தினர் போன்றவற்றின் வேறுபாடுகளை அதிகப்படுத்துதல் வகையிலான செயல்களில் அரசியல் கட்சியினர் ஈடுபட கூடாது. ஓட்டுகளை பெறுவதற்காக சமூக உணர்வுகளை தூண்டும் வகையில் வேண்டுகோள்கள் விடுக்க கூடாது.

பிரசாரம்

கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் போன்றவற்றை தேர்தல் பிரசார இடமாக பயன்படுத்த கூடாது. மற்ற கட்சிகளை விமர்சிக்கும் போது அவர்களுடைய கொள்கைகள், திட்டங்கள் குறித்து பேச வேண்டும்.

வாக்காளர்

எந்த வகையிலும் வாக்காளர்களுக்கு லஞ்சமோ, வெகுமதியோ வழங்க கூடாது. வேட்பாளர்களின் தனிப்பட்ட நடத்தை குறித்து தவறான செய்திகளை வெளியிட கூடாது.

வசதிகள்

ஓட்டுச்சாவடிக்கு சென்று வர வாக்காளர்களுக்கு போக்குவரத்து வசதிகள் செய்யக்கூடாது எனவும், மதுபானங்கள், போதை பொருள்கள் வழங்க கூடாது. உரிமையாளர்களின் எழுத்துப்பூர்வ அனுமதியின்றி கொடி கம்பங்கள் கட்ட கூடாது.

சலுகைகள்

தேர்தல் பணிக்காக அரசு அமைப்புகளையோ, அரசு பணியாளர்களையோ பயன்படுத்த கூடாது. அமைச்சர்களுக்கு அரசு வாகனங்களோ, சலுகைகளோ அளிக்க கூடாது என அதில் கூறப்பட்டிருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here