Latest Tamil News 2022 : பதிவுத்துறையில் பரபரப்பு சம்பவத்தால் 8 மாதங்களில் 84 பேர் சஸ்பெண்ட்!

0
57
Offices

அலுவலகம்

தமிழகத்தில் 575 சார் பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இதில் சென்னை,கோவை,மதுரை, திருச்சி உள்ளிட்ட நகரங்களில் உள்ள அலுவலகங்களில் பணியாற்ற பெரும் போட்டி நடக்கும்.

முறைகேடு

பத்து ஆண்டுகளில் பதிவுத்துறையில் லஞ்சமும்,முறைகேடும் மிகவும் அதிகரித்துள்ளதால், இந்த முறைகேடுகளை விசாரிக்க புலனாய்வு குழு அமைக்கப்படும் என அமைச்சர் அறிவித்தார்.

2stamp 2 15813123542

விசாரணை

பதிவுத்துறை அலுவலர்கள் பலரும் விசாரணை அடிப்படையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில் பல அலுவலங்களில் துறை அமைச்சரே நேரடியாக சென்று விசாரணை நடத்தி அலுவலர்களை சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டார்.

மிரட்டல்

நல்ல வருவாய் உள்ள இடங்களுக்கு அரசியல் செல்வாக்கை பயன்படுத்துவதும், பணி மாறுதல் வாங்குவதும் மாறவே இல்லை. முதல்வர், அமைச்சர் நிர்வாகிகளுக்கு தெரிந்தவர்கள் , வேண்டியவர்கள் என அலுவலர்களை மிரட்டுவதும் வழக்கம் போல தொடர்கிறது.

ஆட்சி

திமுக ஆட்சி பொறுப்பேற்ற எட்டு மாதங்களில் பதிவுத்துறையை சேர்ந்த 84 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பதாக அலுவலர்கள் தெரிவிக்கின்றனர். இவர்களில் 22 பேர் மட்டுமே அதிமுக ஆட்சியில் முறைகேடு செய்ததாக நடவடிக்கைக்கு உள்ளானவர்கள். மற்ற அலுவலர்கள் தற்போது வந்த புகார் மற்றும் முறைகேடுகளுக்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here