Latest Tamil News 2022 : மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் குறித்து பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு!

0
70
kulanthaikal

அதிகாரிகள்

கோவையில் ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ் 5000 மாற்றுத்திறன் குழந்தைகள் கண்டறியப்பட்ட நிலையில் சுமார் 2000 மனவளர்ச்சி குறைபாடுகள் உள்ள குழந்தைகள் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

குழந்தைகள்

ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் மூலம் இரண்டு ஆண்டுகளாக பெற்றோருக்கும், குழந்தைகளுக்கும் சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டு வரும் நிலையில், கோவையில் 2020 மே மாதத்தின் நிலவரப்படி 72 மாற்றுத்திறன் குழந்தைகள் கண்டறியப்பட்டுள்ளனர்.

பயிற்சி

இந்த குழந்தைகளின் பெற்றோருக்கு ஆன்லைன் வாயிலாக ஆயத்த மையங்களில் சிறப்பு பயிற்சி மாவட்ட அளவில் நடத்தப்பட்டதில் 60 பேர் பங்கேற்றனர். இதில் கலந்துகொண்டவர்களுக்கு குழந்தைகளை குறித்து சில விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கூற்று

ஒருங்கிணைந்த கல்வித்திட்டத்தின் கீழ் 6-18 வயதுள்ள குழந்தைகளுக்கு சிறப்பு பயிற்சியினை வழங்கி வந்ததாகவும், கடந்த 2 ஆண்டுகளாக குழந்தைகளின் பெற்றோருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.

காரணங்கள்

உறவுகளுக்குள் திருமணம், குழந்தை திருமணம், பிரசவத்தின் போது சிக்கல் போன்ற பல காரணங்களால் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளின் பிறப்பு அதிகரிக்கிறது என அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here