Latest Tamil News 2022 : முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பயங்கரவாதிகளின் போஸ்டர்களை ஒட்டிய போலீசார்!

0
59
police

எச்சரிக்கை

முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பயங்கரவாதிகளின் போஸ்டர்களை பல இடங்களில்அங்குள்ள போலீசார் சுவர்களில் ஒட்டியுள்ளனர். குடியரசு தின கொண்டாட்டத்தை சீர்குலைக்கும் நோக்கில் டில்லி உட்பட முக்கிய நகரங்களில் பயங்கரவாதிகளின் தாக்குதல் நடத்த திட்டம் போட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.

பாதுகாப்பு

குடியரசு தினமான இன்று டில்லி உட்பட முக்கிய நகரங்களில் எங்கும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தலைநகர் டில்லியில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்ட நிலையில் எல்லைகளில் தீவிர சோதனைக்கு பின்பே வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படுகின்றன.

புகைப்படங்கள்

இந்த நிலையில் டில்லியில் கன்னாட் பிளேஸ் பகுதியில் பயங்கரவாதிகளின் புகைப்படங்களை போலீசார் ஒட்டியுள்ளனர்.

போலீசார் கூற்று

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நடந்த போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டதால் சிலர் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு வைத்துள்ளனர். அவர்களை வைத்து பயங்கரவாத அமைப்புகள் தாக்குதல் நடத்த உள்ளதாக வந்த தகவலால் பயங்கரவாதிகளின் படங்களை பொது இடங்களில் ஒட்டியுள்ளோம் என கூறினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here