Latest Tamil News 2022 : யூக வணிகத்தில் இருந்து பருத்தியை விலக்க கோரிக்கை!

0
63
Cotton

காணொலி நிகழ்ச்சி

தமிழக ஜவுளித்துறை ஏற்பாடு செய்த காணொலி நிகழ்ச்சியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றுள்ளார். தமிழக ஜவுளி அமைச்சர், இந்திய ஏற்றுமதியாளர் கூட்டமைப்பு தலைவர், நூற்பாலை சங்க முதன்மை ஆலோசகர் உட்பட ஜவுளித்துறையினர் போன்றோர் பங்கேற்றனர்.

பாதிப்பு

கடந்த 15 மாதங்களாக மாதத்திற்கு ஒருமுறை நூல் விலை உயர்ந்து வருகிறது. இந்த காரணத்தால் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

மூலப்பொருள்

சிறு நடுத்தர ஆடை உற்பத்தி நிறுவனங்கள் நிதி நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளதாலும் மூலப்பொருள் வாங்கும் திறன் குறைந்துள்ளதால் ஆடை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

கோரிக்கை

பஞ்சு ஏற்றுமதிக்கு வரி விதித்து கட்டுப்படுத்த வேண்டும் என்றும், இறக்குமதி பஞ்சு மீதான 11 சதவீத வரியை நீக்க வேண்டும் என்றும் கூறினர். ஏற்றுமதி நிறுவனங்கள் பெறும் கடனுக்கு வழங்கப்பட்டு வந்த வட்டி நிறுத்தப்பட்டுள்ளதால், இந்த திட்டத்தினை அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here