Latest Tamil News 2022 : ரிசெர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் மத்திய அரசுக்கு ஆலோசனை!

0
63
porulaathaaram

பேச்சு

ரகுராம் ராஜன் பொருளாதார நிலவரம் மீது தனது வெளிப்படையான விமர்சனங்களுக்கென்றே அறியப்பட்டவர் ஆவார். அவர் இந்திய பொருளாதாரத்தின் தற்போதைய நிலவரம் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

k- வடிவ மீட்சி

இந்திய பொருளாதாரத்தில் k- வடிவ மீட்சி என ஒன்று உள்ளதாக அவர் கூறினார். இந்த மாதிரியான மீட்சியில் தொழில்நுட்ப துறையும், நிறுவனங்களும் லாபகரமாக செயல்படும் நிலையில் சில குறுந்தொழில்கள் கடனில் சிக்கி தவிக்கும்.

வேலைவாய்ப்பின்மை

நடுத்தர வர்க்கத்தினருக்கும், சிறு தொழிலாளர்களுக்கும் அச்சுறுத்தல் தரும் வகையில் பொருளாதார மீட்சி இருக்க கூடாது என கூறியுள்ளார். ஒரு புறம் வேலைவாய்ப்பின்மை அதிகரித்து கொண்டே செல்வது k- வடிவ மீட்சியாக மாறலாம் எனவும் அவர் கூறினார்.

பின்னடைவு

பொருளாதாரத்தில் மீண்டு வரும் சூழலில் ஓமைக்ரான் ஏற்பட்டுள்ளது பொருளாதார ரீதியாக பின்னடைவை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளார்.

எதிர்பார்ப்பு

மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்போது அதில் அடுத்த 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு பார்வையுடன் சீர்திருத்தங்கள் அறிவிக்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here