Latest Tamil News 2022 : விரைய சனி, ஜென்ம சனி, பாத சனியால் பாதிப்பு ஏற்படும் சில ராசிகள்!

0
65
raasi

ஏழரை சனி

தற்போது தனுசு, மகரம், கும்பம் ராசிக்கு ஏழரை சனி நடைபெறுகிறது. சில மாதங்களில் தனுசு ராசிக்கு ஏழரை சனி முடியும் நிலையில் மீன ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி தொடங்குகிறது.

சனிபகவான்

ஒரு ராசியில் இரண்டரை ஆண்டு காலம் மட்டுமே சனிபகவான் பயணம் செய்வார். ராசியின் 12ஆம் வீடு, ஜென்ம ராசி போன்றவை சனிபகவான் அமரும் காலங்கள்.

110

கும்பராசி பயணம்

ஏப்ரல் மாதம் 29ஆம் தேதியன்று சனி பகவான் மகரத்திலிருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சியாக உள்ளார். சனி பகவான் கும்ப ராசியில் இருந்து வக்ர கதியில் பயணம் செய்ய இருப்பதோடு அக்டோபர் மகர ராசியில் இருந்து மீண்டும் பயணம் செய்வார்.

ஜென்ம சனி

30 ஆண்டுகளுக்கு பிறகு கும்ப ராசியில் ஆட்சி பெற்று அமரபோகும் சனிபகவான் அங்கிருந்து மேஷம், சிம்மம், விருச்சிக ராசிகளை பார்க்கிறார். தனுசு ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியின் தாக்கத்தில் இருந்து நிம்மதி பெருமூச்சு விடும் நேரமாக உள்ளது.

கண்டச்சனி

இடப்பெயர்ச்சியாகும் சனியால் கடக ராசிக்கு அஷ்டம சனியும், சிம்ம ராசிக்கு கண்டச்சனியும் ஆரம்பமாகிறது. இந்த இரண்டு ராசிக்காரர்கள் இரண்டரை ஆண்டு காலம் கவனமாக இருக்க வேண்டும். இடம் மாறுவது, தொழில் முதலீடு போன்றவற்றை தவிக்க வேண்டும்.

111

கன்னி

மேஷ ராசிகளுக்கு லாப சனியாகவும், ரிஷப ராசிக்காரர்களுக்கு தொழில் சனி பெயர்ச்சியாகவும் மாறும். மிதுன ராசிகாரர்களின் கஷ்டங்கள் முடியப்போகிறது. துலாம் ராசிகாரர்களுக்கு பூர்வ புண்ணிய சனியாக மாறி அமர உள்ளார்.

பரிகாரம்

சனிப்பெயர்ச்சியால் மகரம், கும்பம், மீனம், சிம்மம், விருச்சிகம் ராசிக்காரர்கள் பரிகாரம் கட்டாயம் செய்ய வேண்டும். விநாயகர் கோவிலுக்கு சென்று அருகம்புல் சாற்றி வழிபடுவது,அனுமன் கோவிலுக்கு சென்று நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடலாம். வீட்டின் வாசலில் பச்சரிசி கோலம் போட்டால் சனியால் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here