Latest Tamil News 2022 : வெடிகுண்டு மீது டிராக்டர் ஏறி விபத்து!

0
57
bomb

விருதுநகர்

கோட்டையூர் காலனி பகுதியில் பல குடும்பங்கள் அங்கு வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உயர்நிலைப்பள்ளியின் பின்புறம் தரிசு நிலம் உள்ளது. அங்கு அதே பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர் டிராக்டர் ஓட்டி சென்றுள்ளார்.

சத்தம்

தரிசு நிலத்தில் கிடந்த நாட்டு வெடிகுண்டு மீது சக்கரம் ஏறியதால் வெடிகுண்டு வெடித்து பெரிய சத்தம் கேட்டுள்ளது. இந்த சத்தத்தை கேட்டு மக்கள் சம்பவ இடத்தில் குவிந்துள்ளனர்.

விசாரணை

இதனை குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், காவல் கண்காணிப்பாளர் மனோகரன் தலைமையிலான காவல் துறையினர் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வெடிகுண்டுகள்

வெடிகுண்டு வெடித்த இடத்தில் பார்வையிட்டபோது அதன் அருகிலேயே 6 நாட்டு வெடிகுண்டுகள் கிடந்துள்ளது. வெடிகுண்டு நிபுணர்கள் அந்த இடத்தில் மேலும் ஆய்வு செய்து வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here