Latest Tamil News 2022 : ஹிந்துக்கள் 3 குழந்தைகளை பெற வலியுறுத்தும் விஷ்வ ஹிந்து பரிஷத்!

0
49
hinthu

ஹிந்துக்கள்

மக்கள் தொகை குறையாமல் தடுக்க ஹிந்துக்கள் இரண்டு அல்லது மூன்று குழந்தைகள் பெற்றுக்கொள்ள விஸ்வ ஹிந்து பரிஷத் வலியுறுத்தியுள்ளது. மத்திய பிரதேசத்தின் கண்ட்வாவில் ஹிந்து இளைனர்கள் மாநாடு நடந்தது.

மூத்த தலைவர் மிலிந்த் பராண்டே பேசியது

நாட்டின் மக்கள் தொகையில் ஹிந்துக்கள் எண்ணிக்கை குறைந்து வருவதோடு மதமாற்ற நடவடிக்கைகளும் அதிகரித்து வருவதை தடுக்க வேண்டும். இதனை தடுக்காவிடில் 50 ஆண்டுகளில் ஹிந்துக்கள் சிறுபான்மை மக்களாகி விடுவர்.

குழந்தைகள்

ஹிந்து சமூகத்தை பாதுகாக்க ஹிந்துக்கள் இரண்டு, மூன்று குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும். ஹிந்துக்களிடம் ஒற்றுமை இல்லாத காரணத்தால் நாடு ஆங்கிலேயர்களிடம் சிக்கி அடிமைப்பட்டது.

கல்வி

ஆங்கிலேயர் வருவதற்கு முன் நம் நாடு கல்வியறிவில் சிறந்து விளங்கி இருந்தது. இதனை தடுக்க ஆங்கிலேயர்கள் மெக்காலே கல்வி திட்டத்தை அறிமுகப்படுத்தினர். மெக்காலே கல்வி திட்டத்தை மத்திய அரசின் புதிய கொள்கை மாற்றியமைக்கும் என கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here