Latest Tamil News 2022 : 2022 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் பட்டியலை வெளியிட்ட அமைச்சகம்!

0
70
Padma Vibhushan

விருதுகள்

2022ம் ஆண்டில் பத்ம விருதுகள் பெறுவோர் பட்டியலை உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அரசியல், சமூகம், நிர்வாகம்,கலை, நாடகம், ஓவியம் போன்ற பல்வேறு துறைகளில் சிறந்த முறையில் பணியாற்றியவர்களை கண்டறிந்து அவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுகிறது.

சாதனை

ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல் மாதத்தில் குடியரசு தலைவரால் சாதனையாளர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகிறது. இதன் மூலம் 128 சாதனையாளர்களுக்கு பத்ம விபூஷண், பத்ம பூஷன், பத்மஸ்ரீ போன்ற விருதுகள் வழங்கி கொளரவிக்கப்பட உள்ளனர்.

gallerye 204736397 29453471

பாதுகாப்பு படை தளபதி

கடந்த மாதம் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த இந்தியாவின் பாதுகாப்பு படை தளபதிக்கு நாட்டின் இரண்டாவது மிக உயரிய விருதாக உள்ள பத்ம விபூஷண் வழங்கப்பட உள்ளது.

gallerye 204736397 29453472

தடுப்பூசி தயாரிப்பாளர்

அடுத்ததாக தடுப்பூசி தயாரிப்பாளர்கள் சைரஸ் பூனவல்லா, பாரத் பயோடெக் நிறுவனத்தின் கிருஷ்ணா எல்லா ஆகியோருக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்படுகிறது.

கூகிள்

தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் மைக்ரோசாப்ட், கூகிள் நிறுவனங்களின் தலைவர்களுக்கும் பத்ம பூஷன் விருதுகள் வழங்கப்படுகிறது. அதனை தொடர்ந்து பாடகர் சோனு நிகம் , நீரஜ் சோப்ரா ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here