Male And Female ஆணுக்கு பெண்ணிடம் பிடிக்காத விஷியங்கள் என்னென்ன பார்ப்போம்!

0
57

இன்று உறவுகளில் மிக முக்கியமான ஒன்று உறவுகளில் ஒருவரை ஒருவர்
புரிந்து கொள்ளாமல் இருப்பதுதான். இதனால் தான் நாட்டில் சண்டைகளும், பிரிவுகளும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையேள்ள உறவு:

ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் எந்த அளவுக்கு காதல் வளர்கிறதோ அதே வேகத்தில் முடிவடைந்துவிடுகிறது. இந்த கால இளம் பெண்களுக்கும் ஆண்களுக்கும் முதிர்ச்சி தன்மை அதிகமாக காணப்படுகிறது. இதுதான் இதற்கு காரணமாக இருக்கலாம் என பலரால் கூறப்படுகிறது. உண்மையாவே நாம் பழகினால் பிடிக்காத ஒரு உறவை வாழ்கியிலிருந்து விலக்குவது நல்லது தான்.

இதுபோன்ற நட்பு ரிதியான உறவுகளிலும் புரிந்து கொள்ளாமை அதிகமாக காணப்படுகிறது. ஒருவர் மீதான மற்றவர்கள் எதிர்பார்ப்புகளும் அதில் ஏற்படும் ஏமாற்றங்களும் தான் உறவுகளில் ஏற்படும் விரிசல்களுக்கு முக்கிய காரணமாகின்றன.

ஆண்களுக்கு பெண்களிடம் பிடிக்காத விஷியங்க்கள்:

பெண்கள் முதல் ஆண்கள் வரை அனைவருக்கும் எதிர்பார்ப்புகள் ஒன்றுதான். பெண்கள் ஆண்களிடம் எதிர்பார்பதுபோலவே,ஆண்களும் பெண்களிடம் எதிர்பார்க்கின்றனர் . இது போன்ற விஷியங்கள் இப்போதும் இருந்து கொண்டேதான் இருக்கின்றன.

அவர்கள் குணங்கள் நடவடிக்கைகளை மாற்ற முற்படுவது குடும்பத்திதில் முதலில் குழப்பத்தை ஏற்படுத்தும் . பெண்களுக்கு பொறுத்து கொள்ளும் மனப்பான்மை அதிகம் இருப்பதால் எந்த ஒரு சூழலிலும் அதற்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக்கொள்கின்றனர் .

ஆனால் ஆண்களுக்கு தனிப்பட்ட நடவடிக்கைகளில், நட்பு, வட்டாரங்கள், சொல்லப்போனால் உடை அணியும் முறை, ஹேர் ஸ்டைல்
என அவர்களுக்கென்று ஒரு முறையை பின்பற்றுவார்கள். இதில் தவறு இருந்தால் பெண்கள் அதை மாற்ற முற்படுவார்கள். இது கூட ஆண்களுக்கு பிடிக்காத விஷயமாக இருக்கலாம்.

தேவை இல்லாத பேச்சுக்கள்:

இதில் ஆண்களின் எதிர்பார்ப்புகளும் பெண்களின் எதிர்பார்ப்புகளும், ரொம்ப வித்தியாசமானது. பெண்கள் அதிகம் பேசுவார்கள். ஆனால் ஆண்கள் குறைவாக பேசுவார்கள். இதுகூட உண்மையாக இருக்கலாம் .

ஒருவரை ஒருவர் அதிகாரம் பண்ணுதல்:

இன்றைய காலத்தில் பெண்களும் ஆண்களை போலவே வேலைக்கு செல்லும் நிலையில் உள்ளனர். வீட்டையும் பொருளாதார ரீதியாக பார்த்து கொள்கின்றனர். இருவரும் வேலைக்கு போகும் போது ஒருவரை ஒருவர் அதிகாரத்தை கையில் எடுக்கும் நிலையில் உள்ளனர். இதனாலும் ஆண்களுக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்படுகிறது. இதனாலும் பிரச்சனைகள் வருவதற்கு காரணமாக அமைகிறது.

அதிகமான அன்பு வைத்தல்:

அதிகமான அன்பு இருத்தலும் ஒருவகையில் ஆபத்து தான். மாறாக ஒருவரது குணத்தை புரிந்து கொண்டு நடத்தலும் விட்டு கொடுப்பதிலும் தான் பெரும்பாலான உறவுகள் நீடித்து வருகின்றன. சில பெண்களை பெருத்த வரை தன்னிடம் மட்டும் தான் பேச வேண்டும், நேரம் செலவழிக்க வேண்டும் என்று நினைப்பார்கள். இதுவும் ஆண்களுக்கு பிடிக்காது. இது உறவில் விரிசலை ஏற்படுத்தும்.

இது மட்டுமல்லாமல் ஆண்களுக்கு உணர்ச்சியையோ, காதலையோ வெளிப்படுத்த தெரியாது. என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. எனவே நாம் அவர்களின் எதிர்பார்ப்புகளை புரிந்து கொண்டு அவர்களுக்கு பிடித்தமாதிரி நடந்து கொள்ள வேண்டும். அரை மணி நேரமாவது அவர்களுடன் நேரம் செலவழிக்க வேண்டும். புரிதல் இல்லாத சமயத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் பேசினாலே பிரச்சனை இல்லாமல் இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here