Ayush Badoni! : ஐபிஎல் போட்டியில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த லக்னோ வீரர்!

0
61

இளம் வீரர்

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் லக்னோ அணிக்கு களமிறங்கிய இளம் வீரர் ஆயுஷ் பதோனி அறிமுக ஆட்டத்திலேயே அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

குஜராத் அணி

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக நடந்த ஆட்டத்தில் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் தோல்வியடைந்தது. 159 ரன்கள் இலக்கை துரத்திய குஜராத் அணி இறுதிக்கட்ட ஓவர்களில் வெற்றியை வசப்படுத்தியுள்ளது.

ஆயுஷ் பதோனி

இந்த போட்டியில் லக்னோ அணியின் 22 வயதான ஆயுஷ் பதோனி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இவர் 41 பந்துகளில் 3சிக்ஸர், 4பவுண்டரி, 54 ரன்கள் விளாசி அணியின் ஸ்கோரை உயர்ந்த நிலைக்கு கொண்டு சென்றார்.

நன்றி

கடந்த மூன்று வருடங்களாக ஏலத்தில் என்னை தேர்வு செய்யவில்லை. என்னை ஏலத்தில் தேர்வு செய்ததற்காக லக்னோ அணிக்கு நன்றியுள்ளவனாக இருப்பேன் என கூறியுள்ளார்.

கேப்டன் கேஎல் ராகுல் கூற்று

பதோனி எங்களுக்கு பேபி டிவில்லியர்ஸ் என்றும், முதல் நாளில் அவர் பேட் செய்த விதம் நம்ப முடியாத வகையில் இருந்தது என்றும் கூறியுள்ளார். பதோனியால் 360 டிகிரியில் பந்தினை அடிக்க முடியும் என்றார்.

இன்றைய ஆட்டம்

பெங்களூரு – கொல்கத்தா
நேரம் : இரவு 7.30
நேரலை : ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here