Meera Mithun! : மீண்டும் ஒரு வழக்கில் கைதாகும் மீரா மிதுன்! நீதிமன்றத்தின் அதிரடி நடவடிக்கை!

0
63

மீரா மிதுன்

சூப்பர் மாடல் என தன்னை தானே சொல்லி கொள்ளும் மீரா மிதுன் சில படங்களில் நடித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் இவர் பிரபலமானார். பல்வேறு நபர்களிடம் பணம் வாங்கி மீரா மிதுன் ஏமாற்றியதாக ஜோ மைக்கல் குற்றம் சாட்டி இருந்தார். இவர் மீது காவல் நிலையத்தில் பல புகார்களும் உள்ளன.

சர்ச்சை

பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசி வெளியிட்ட வீடியோ சர்ச்சையினை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தொடர்பாக சிறையில் இருந்த இவர் ஜாமினில் வெளியில் வந்துள்ளார்.

வழக்குப்பதிவு

இயக்குனர், முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் குறித்து ஆபாச வார்த்தைகளால் திட்டி ஆடியோ பதிவிட்டது தொடர்பாக மீரா மிதுன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்மீது உள்நோக்கத்துடன் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக மனுதாக்கல் செய்திருந்தார்.

தள்ளுபடி

காவல்துறை அளித்த விளக்கத்தை ஏற்ற நீதிபதி முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மீரா மிதுனை கைது செய்யவும், பதிவுகளை நீக்க நடவடிக்கை எடுக்கவும் காவல்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here