Minister Mansuk Mandavia! : தமிழகத்தில் புதிய சிப்செட் மையம் அமைக்கப்படுவதாக அமைச்சர் தகவல்!

0
74

நிறுவனம்

சென்னை கிண்டி தொழிற்பேட்டையில் சிப்செட் என்ற மத்திய பிளாஸ்டிக்ஸ் நிறுவனம் 1968 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. பிளாஸ்டிக்ஸ் தொடர்பான இளநிலை, முதுநிலை படிப்புகள் இங்கு கற்றுக்கொடுக்கப்படுகிறது. இங்கு ஆறு அடுக்கு உடைய தொழில்நுட்ப மையம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியானது நேற்றைய தினம் நடைபெற்றுள்ளது.

அமைச்சர் கூற்று

பிளாஸ்டிக் துறையின் வளர்ச்சியில் மிகவும் முக்கியமானது சிப்செட். வாகன உற்பத்திக்கு தேவையான பிளாஸ்டிக் சார்ந்த உதிரி பாகங்கள், மருத்துவத்துறைக்கு தேவையான பிளாஸ்டிக், வேளாண் துறைக்கு தேவையான பொருள்கள் போன்றவற்றில் சிப்செட் பங்களிப்பு மிகவும் இன்றியமையாதது ஆகும்.

mansukh mandaviya 1

புதிய மையம்

இந்த துறைகளின் வளர்ச்சி பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ளது. இதன் மூலம் திறன் பெற்ற தொழிலாளர்கள் அதிகம் உள்ளனர். இதன் வாயிலாக வேலைவாய்ப்புகள் உருவாகும். தமிழகத்தில் உள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் புதிய மையம் அமைக்கப்படும். மேலும் கர்நாடகா, குஜராத், ராஜஸ்தானில் சிப்செட் மையம் அமைக்கப்பட உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here