Muslim organizations protest in Karnataka today! : கர்நாடகாவில் இன்று முஸ்லீம் அமைப்பினர் முழு அடைப்பு போராட்டம்!

0
96

வழக்கு

கல்லூரிகளில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் முஸ்லீம் மாணவிகள் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கானது கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி, நீதிபதிகள் கிருஷ்ண தீட்சித், ஜே.எம்.காஜி ஆகியோர் தலைமையில் விசாரிக்கப்பட்டது.

தீர்ப்பு

உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் ஹிஜாப் என்பது இஸ்லாமிய சட்டத்தில் அத்தியாவசிய விஷயமல்ல என கூறியது. கல்வி நிலையங்களில் ஹிஜாப்புக்கு கர்நாடக அரசு விதித்த தடையானது செல்லும் என நேற்று முன்தினம் தீர்ப்பினை அளித்தது.

கடை அடைப்பு

இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து யாதகிரியில் முஸ்லீம் மாணவிகள் தேர்வினை புறக்கணித்தனர். உத்தர கன்னடா மாவட்டத்தில் உள்ள பட்கலில் முஸ்லீம் அமைப்பினர் கடையினை அடைத்து உள்ளனர்.

கூட்டமைப்பு

கர்நாடகா முஸ்லீம் அமைப்புகளின் கூட்டமைப்பு ஹிஜாப் அத்தியாவசியமான நடைமுறை அல்ல என தீர்ப்பினை அளித்ததை ஏற்க முடியாது. பள்ளி, கல்லூரிகளில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து செல்ல அனுமதிக்கவும், தீர்ப்பை ரத்து செய்யவும் இன்று முழு அடைப்பு நடத்தப்படும் என்றும், கர்நாடகா முழுவதும் கடைகளை அடைத்து ஆதரவினை அளிக்க வேண்டும் எனவும் அறிவித்துள்ளது.

போலீஸ் பாதுகாப்பு

முஸ்லீம் அமைப்புகளின் முழு அடைப்பு போராட்ட அறிவிப்பால் கர்நாடகாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநிலத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மனுதாக்கல்

ஹிஜாப் வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து முஸ்லீம் மாணவிகள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுதாக்கல் செய்துள்ளனர். இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க மறுத்த உச்சநீதிமன்றம் ஹோலி விடுமுறைக்கு பிறகு விசாரணை நடத்துவதாக நேற்று தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here