Myna Nandini Dubai Tour! : துபாயில் மைனா நந்தினியின் தங்கம் தேடும் பணி! மைனாவின் துபாய் டூர்!

0
48

மைனா

விஜய் தொலைக்காட்சியில் சரவணன் மீனாட்சி என்ற தொடரில் நடித்தவர் நந்தினி. இதில் பிரபலமானதால் இவரை மைனா நந்தினி என அழைப்பார்கள். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருமணம்

மைனா நந்தினி அவருடன் பணியாற்றிய யோகேஸ்வரன் என்ற சீரியல் நடிகரை காதலித்து இரு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு துருவன் என்ற மகன் உள்ளார்.

சூப்பர் சிங்கர்

பிரியங்கா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றதால் அந்த நிகழ்ச்சியினை மைனாவே தற்போது தொகுத்து வழங்குகிறார். இவர் கலக்க போவது யார் நிகழ்ச்சியிலும் ஜட்ஜாக இருந்துள்ளதால் இவருக்கு நகைச்சுவை உணர்வு அதிகம்.

துபாய் டூர்

இவர்கள் துபாயில் தங்கத்திலான செவன் ஸ்டார் ஹோட்டல் ஒன்றை சுற்றி பார்க்க சென்றுள்ளனர். அதனை குறித்த புகைப்படங்களை இணையதளத்தில் பதிவிட்டுள்ளனர்.

தங்கம்

அங்கு உள்ள அனைத்து இடங்களையும் சுற்றி பார்க்கும் மைனா அங்கிருந்த கோப்பையின் மூடியை எடுத்து இது ஒன்றும் கிடைத்தால் போதும் என கூறுகிறார். இந்த ஹோட்டலில் தங்குவதற்கு ஒரு இரவிற்கு ரூபாய் 50 லட்சம் ஆகுமாம், அந்த ஹோட்டலில் இவர்கள் நடத்திய தங்க வேட்டை வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here