NATO warns Russia! : ரஷியாவிற்கு எச்சரிக்கை விடுத்த நேட்டோ கூட்டமைப்பு!

0
30

மாநாடு

உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பு குறித்து விவாதிக்க பெரும்பாலான நேட்டோ உறுப்பினர்களை கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர்கள், பிரதமர்கள் பங்கேற்கும் மாநாடானது அடுத்த வாரம் நடைபெற உள்ளது.

பொதுச்செயலாளர் கூற்று

செய்தியாளர்களிடம் பேசிய நேட்டோ கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க், உக்ரைனில் ரசாயன தாக்குதலை நடத்த ரஷியா தயாராகி வருவதாக தெரிவித்தார். நேட்டோ உறுப்பு நாடுகள் கவலை அடைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார். உக்ரைனில் உயிரி ஆயுத ஆய்வகங்கள் இருப்பதாக ரஷியா தவறான குற்றசாட்டை கூறியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

சட்டம்

இதனை காரணம் காட்டி ரஷியா ரசாயன தாக்குதலை நடத்தலாம் என்றும், நேட்டோ இதனை குறித்து மிகவும் விழிப்புடன் இருப்பதாகவும் கூறினார். அத்தகைய சர்வதேச சட்டத்தை ரஷியா மீறும் போது அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மறுப்பு

ரஷியா உக்ரைனில் ரசாயன தாக்குதல் நடத்தினால் நேட்டோ தரப்பில் ரஷியாவிற்கு ராணுவ பதிலடி கொடுக்கப்படுமா என்று கேட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்க மறுத்து விட்டார்.

படைகள்

உக்ரைன் எல்லையில் உள்ள நேட்டோ நாடுகளின் படைகளுக்கு வலுவூட்டும் வகையில், கிழக்கு பகுதியில் தயார் நிலையிலும், அதிகமான ஆயுதங்களுடன் கணிசமான அளவு நேட்டோ படைகளையும் சேர்க்கலாம் என அவர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here