New actress to replace Raja Rani serial! : ராஜா ராணி சீரியலில் ஆலியா மானசாவிற்கு பதிலாக புதிய நடிகை!

0
163

ராஜா ராணி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல்களில் ஒன்று ஆலியா மானசா நடிக்கும் ராஜா ராணி. பொதுவாக ஒரு சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவிட்டால் அதனை இரண்டாவது, மூன்றாவது சீசன்கள் எடுப்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.

raja rani 1

பாகம்

ராஜா ராணி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால் சீரியலின் இரண்டாவது பாகம் சமீப காலங்களாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருவதோடு மட்டுமல்லாமல் முன்னணி வகிக்கும் சீரியலாகவும் இருந்து வருகிறது.

முதலிடம்

இந்த சீரியலில் ஆலியா மானசா மற்றும் இவருக்கு ஜோடியாக கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான திருமணம் சீரியலின் ஹீரோவான சித்து நடித்து வருகிறார். விஜய்டிவி டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடித்து வருவதற்கு முக்கிய காரணமாக இந்த சீரியல் உள்ளது.

raja rani 2

ஆலியா மானசா

இவரின் நிஜவாழ்க்கையில் கர்ப்பமாக இருந்து வருவதால் இந்த சீரியலில் இருந்து விலகியுள்ளார். திடீரென்று இவர் விலகியதால் விஜய் டிவியின் டிஆர்பி ரேட்டிங் அடிவாங்கும் என கருதப்படுகிறது.

கதாபாத்திரம்

தற்போது ஆலியா மானசா நடித்து வந்த சந்தியா கதாபாத்திரத்தில் ரியா விஸ்வநாதன் என்ற நடிகை நடிக்கவுள்ளார். இவர் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வரும் விஷாலின் நெருங்கிய நண்பர் ஆவார்.

raja rani 4

எபிசோடு

ரியா நடித்து வரும் எபிசோடுகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ரியா அவர்களின் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here