இப்போது புதிய ட்ரெண்டிங்கில் மஹிந்திரா…

0
34

அனைத்து ஆட்டோமொபைல் நிறுவனங்களும் டிமாண்டிற்கு ஏற்றவாறு தனது வர்த்தகத்தை மாற்றி வருகிறது.

அனைத்து ஆட்டோமொபைல் நிறுவனங்களும் இந்தியாவிற்கான மாற்றத்தை எதிர்கொள்ள எலக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்க முடிவு செய்துள்ளது.

தரமான எலக்ட்ரிக் வாகனங்கள்

இந்தியாவில் வேகமாக எலக்ட்ரிக் வாகனங்கள் பயன்படுத்தும் நிலை வராது என கணக்கிட்டு இருந்தனர். தரமான எலக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்தால் மக்கள் வாங்குவார்கள் என்பதை இரு சக்கர வாகன பிரிவில் ஓலா இதனை நிரூபித்து காட்டியது.

டாடா மோட்டார்ஸ் நிறுவன பிரிவு

டாடா மோட்டார்ஸ், டிவிஎஸ் நிறுவனங்கள் வெளிச்சந்தையில் இருந்து எலக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்க முதலீட்டை திரட்ட முடிவு செய்தது. முதலீட்டை ஈர்க்க டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தை பல பிரிவுகளாக பிரித்துள்ளது.

மஹிந்திரா

முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான மஹிந்திரா புதிய முதலீடுகளையும், முதலீட்டாளர்களையும் வாகன பிரிவில் பெற ஆர்வம் காட்டியுள்ளது. ஆட்டோமொபைல் துறையில் இது புதிய வளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எஸ்யூவி கார்கள்

2027 ம் ஆண்டுக்குள் மஹிந்திரா 16 எலக்ட்ரிக் வாகனங்களை இந்தியாவில் அறிமுகம் செய்வதாக தகவல் வெளியாகி உள்ளது. 50% இந்தியாவில் விற்கப்படும் கார்களாக எஸ்யூவி கார்கள் இருக்கும் என்றும் லைட் கமர்சியள் வாகனங்களாக மீதமுள்ளவை இருக்கும் என தெரிகிறது.

வர்த்தக விரிவாக்கம்

2027ஆம் ஆண்டுக்குள் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா தனது விவசாய வாகனங்கள் மற்றும் உபகரணங்கள் வர்த்தகத்தை10 மடங்கு விரிவாக்கம் செய்ய வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

மஹிந்த்ராவின் இலக்கு

இப்பிரிவில் வருடம் 5000 கோடி ரூபாய் வருமானத்தை பெற வேண்டும் என்று இலக்கை நிர்ணயம் செய்துள்ளது. முதலீட்டாளர்களை ஈர்க்க மஹிந்திரா அண்ட் இந்த பிரிவிலும் முடிவு செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here