Palanivel Thiagarajan talks about the projects! : திட்டங்கள் குறித்து பழனிவேல் தியாகராஜன் விழாவில் பேசியவை!

0
36

திட்டம்

தாலிக்கு தங்கம் திட்டம் 4 ஆண்டுகளாக செயல்படாமல் இருந்துள்ளதாக நிதி அமைச்சர் பழனி வேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

விழா

மதுரை மாநகராட்சி வெள்ளி வீதியார் மேல்நிலைப்பள்ளியில் வருவாய், பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் 486 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவானது நேற்று நடைபெற்றது.

முன்னிலை

இதற்கு மாவட்ட ஆட்சியர் எஸ். அனீஷ்சேகர், மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். மேயர் இந்திராணி, துணை மேயர் நாகராஜன் போன்றோர் முன்னிலை வகித்தனர்.

அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூற்று

தமிழக பட்ஜெட்டில் கல்வி, மகளிர் மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் போன்றவற்றை அளித்துள்ளோம். ஆதரவற்றோர், பின்தங்கியோர் போன்றோர்களுக்கு அனைத்து திட்டங்களும் சேர வேண்டும் என்பதே எங்களது நோக்கம்.

தங்கம்

தாலிக்கு தங்கம் திட்டம் 4 ஆண்டுகளாக செயல்படாமல் இருந்தது. இதனை காலத்திற்கு ஏற்ப மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் பள்ளியில் இருந்து கல்லூரி செல்லும் பெண்களுக்கு மாதந்தோறும் உதவி தொகை வழங்கும் திட்டமாக மாற்றி உள்ளோம் என பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here