Payani Music Album Release Date! : நீண்ட இடைவேளைக்கு பிறகு வெளியான பயணி மியூசிக் ஆல்பம் ரிலீஸ் தேதி!

0
34

மியூசிக் ஆல்பம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா பயணி என்ற மியூசிக் ஆல்பத்தை சிறந்ததாக இயக்கி வந்தார். இது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என மொத்தம் நான்கு மொழிகளில் உருவானது.

payani 1

எதிர்பார்ப்பு

இந்த மியூசிக் வீடியோவின் படப்பிடிப்பு குறித்த வீடியோக்கள் இணையதளங்களில் மிக விரைவில் வைரலாகி பயணி மியூசிக் ஆல்பத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. பிரபுதேவா, குஷ்பு, சுஹாசினி போன்ற பல பிரபலங்கள் ஐஸ்வர்யா ரஜினிக்கு அவர்களது வாழ்த்துக்களை தெரிவித்த வீடியோக்களும் வைரலாகி வந்தது.

payani 2

அறிவிப்பு

சற்று முன்னர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவரது பயணி மியூசிக் ஆல்பம் வெளியாகுவதாக அறிவித்துள்ளார். நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் நாளை பயணி ஆல்பம் வெளியாகிறது என்றும், அனைவரின் ஆதரவும் தேவை என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

இசை

பயணி மியூசிக் ஆல்பத்தின் தமிழ் பதிப்பினை அனிருத் பாடியுள்ளார். அன்கிட் திவாரி இசையமைத்துள்ளார், விவேகா பாடலை எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here