செல்லப்பிராணிகளுக்கு கொடுக்க கூடாத உணவுகள்!

0
65

வீடுகளுக்கு காவலாக மற்றும் குழந்தைகளின் ஆசைக்காகவும் செல்லப்பிராணிகளை பலரும் வளர்த்து வருகின்றனர்.அந்த செல்லப்பிராணிகள் ஆரோக்கியமாக இருக்க தாங்கள் சாப்பிடும் உணவை செல்லப்பிராணிகளுக்கும் கொடுப்பர். செல்லப்பிராணிகளுக்கு நாம் சாப்பிடும் அனைத்து உணவுப்பொருள்களையும் கொடுக்க கூடாது. மேலும் அவைகளுக்கு கொடுக்க கூடாத உணவுகள் என்று சில உள்ளன. இவ்வாறு கொடுப்பது செல்லப்பிராணிகளுக்கு ஆபத்தை விளைவிக்கும்.

சாக்லேட்

தியோப்ரோமைன் என்ற பொருள் சாக்லேட்யில் உள்ளதால் நாய் மற்றும் பூனைகளுக்கும் ஆபத்தாக உள்ளது. இதனை சாப்பிடும் போது செல்லப்பிராணிகளுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது.

டீ, காபி

தியோப்ரோமைன் சாக்லேட்யில் உள்ளதை போல டீ, காபியிலும் உள்ளதால், இது விலங்குகளுக்கு ஆபத்தை விளைவிக்கும். இது பூனையின் இதய துடிப்பை அதிகரித்து மாரடைப்பை ஏற்படுத்தும்.

பால் பொருள்கள்

சில செல்லப்பிராணிகளுக்கு சகிப்புத்தன்மை இருக்காததால் அவைகளுக்கு உடல்நிலை சரியில்லாமல் போகலாம்.பால் பொருள்களை சாப்பிடுவதால் வயிற்றுப்போக்கு , வீக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.

நட்ஸ் பொருள்கள்

நட்ஸ் வகைகளை பச்சையாகவோ சமைத்தோ கொடுப்பது செல்ல பிராணிகளுக்கு தசைவலி, நடுக்கம், இதயத்துடிப்பு போன்றவற்றை ஏற்படுத்தும். சிலர் செல்லப்பிராணிகளுக்கு புரோட்டீன் கிடைக்க சில நட்ஸ் கொடுப்பது தவறான செயல் ஆகும்.

சமைத்த எலும்புகள்

கோழி எலும்புகள், ஆட்டு எலும்புகள் , முயல் எலும்புகள் போன்றவற்றை செல்ல பிராணிகளுக்கு கொடுப்பதால் வயிறு அல்லது பெருங்குடலில் துளைகளை உண்டாக்க வாய்ப்புள்ளது.மேலும் குடலில் அடைப்பை எலும்புகள் ஏற்படுத்தலாம். எலும்புகளை நாய்களுக்கு கொடுக்கவே கூடாது.

திராட்சை

பச்சையான மற்றும் உலர்த்த திராட்சை பழங்களை செல்ல பிராணிக்கு கொடுப்பதால் வாந்தி,குமட்டல் போன்றவை வர வாய்ப்புள்ளது. ஒரு கொத்து திராட்சையை 10 கிலோ நாய்க்கு கொடுத்தாலும் ஆபத்தாகி விடும்.

வெங்காயம்

டிசல்பைடுகள், தியோசெல்பேட்டுகள் வெங்காயத்தில் உள்ளதால் பூனைகள் மற்றும் நாய்க்கு ஆபத்தை ஏற்படுத்தும். வெங்காயத்தை நாய்களுக்கு கொடுப்பதால் ரத்த சிவப்பணுக்களை அழிக்கக்கூடும்.

சமைக்காத முட்டைகள்

முட்டையின் வெள்ளைக்கருவில் அவிடின் என்ற புரதம் உள்ளதால் முடி உதிர்தல் , தோல் பிரச்சனைகள் போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது. சால்மோனெல்லா என்பது முட்டையில் உள்ளதால் மனிதர்களை போலவே விலங்குகளுக்கும் ஆபத்தானது.மேலும் செல்ல பிராணிகள் வைட்டமின் பி பயன்படுத்துவதை தடுக்கும்.

ஆல்கஹால்

செல்ல பிராணிகளுக்கு ஆல்கஹால் கொடுக்காவிட்டாலும் தரையில் கொட்டி கிடப்பதை நக்கி விடக்கூடும். இதனால் நாய்கள், பூனைகளுக்கு தலைசுற்றல், வாந்தி ஏற்படும்.

பச்சை மீன்

செல்ல பிராணிகளுக்கு சமைக்காத மீனை கொடுப்பதை தடுக்க வேண்டும். சமைக்காத மீன்களில் ஒட்டுன்னிகள், பாக்டீரியாக்கள் இருப்பதால் பாதிப்புகள் ஏற்படும்.

காளான்

செல்லப்பிராணிக்கு சாப்பிட உணவு கொடுக்கும் போது காளான்கள் இருந்தால் அதை நீக்கி விட்டு கொடுக்க வேண்டும். நடைப்பயிற்சி செய்பவர் காளான்களிடமிருந்து செல்ல பிராணிகளை பாதுகாப்பாக கூட்டிச்செல்லுங்கள். இந்த காளான் சிறுநீரகங்கள், கல்லீரல் போன்றவற்றை பாதிக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here