Prime Ministers of European who visited Ukraine! : உக்ரைனுக்கு பயணம் சென்ற ஐரோப்பிய நாடுகளின் பிரதமர்கள்!

0
121

தீவிரம்

உக்ரைன் மீது ரஷியா படைகள் 20வது நாளாக போர் தொடுத்து வருகிறார்கள். உக்ரைன் தலைநகர் கீவ்வை கைப்பற்றுவதில் ரஷிய படைகள் தீவிரம் காட்டி வருகின்றன. அங்குள்ள குடியிருப்புகள், மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள் மீதும் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இதையடுத்து உக்ரைன் தலைநகர் கீவ்வில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

பயணம்

கடும் போர் பதற்றம் நிலவி வரும் சூழலில் ஐரோப்பிய ஒன்றிய அமைப்பை சேர்ந்த போலந்து, செக் குடியரசு, பிரதமர்கள் உக்ரைன் தலைநகர் கீவ்விற்கு பயணம் மேற்கொண்டனர்.

தகவல்கள்

பாதுகாப்பு அபாயம் நீடித்த நிலையில் மூன்று தலைவர்களும் பல மணி நேர ரயில் பயணம் மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த பயணமானது பல நாட்களாக திட்டமிடப்பட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.

மடேஸ் மெராவில்கி

செக் குடியரசு, ஸ்லோவேனியா நாட்டு தலைவர்கள், துணை பிரதமருடன் உக்ரைன் தலைநகர் கீவ்வில் இருப்பதாக போலந்து பிரதமர் பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்பு உணர்வு

இந்த போர் காரணமாக உலகம் அதன் பாதுகாப்பு உணர்வை இழந்துவிட்டது என்றும், அப்பாவி மக்கள் கொல்லப்படுகிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஐரோப்பிய தலைவர்களின் இந்த பயணமானது உக்ரைனுக்கு ஐரோப்பிய கூட்டமைப்பின் வலுவான ஆதரவு வெளிப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here