Madhya Pradesh! : நிகழ்ச்சிகள் நடத்த மத்திய பிரதேசத்தில் தடை உத்தரவு!

0
60

வன்முறை

மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெறுகிறது. கடந்த மாதத்தில் ஸ்ரீராம நவமி விழா கடந்த மாதம் கொண்டாடப்பட்டது. கர்கோன் மாவட்டத்தில் அப்போது வன்முறை வெடித்து ஒருவர் உயிரிழந்தார். போலீஸ் அதிகாரி உட்பட பலர் காயம் அடைந்துள்ளனர். வன்முறைகள் குறைந்து கடந்த சில நாட்களாக கர்கோன் நகரில் அமைதி நிலவுகிறது.

தடை உத்தரவு

புனித ரமலான் பண்டிகை பிறை தெரிவதை வைத்து இன்று, நாளை கொண்டாடப்படுகிறது. நாளை அக்ஷய திருதியை, பரசுராமர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. வன்முறைகளை தவிர்க்கும் நோக்கில் இன்றும், நாளையும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அனுமதி சீட்டு

ரமலான் தொழுகையை வீட்டிலேயே மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார். கடைகள் திறந்திருக்கும் என்றும், தேர்வு எழுத மாணவர்களுக்கு சிறப்பு அனுமதி சீட்டு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here