Ranil Wickremesingh தமிழர்களுக்கு போட்டியாக ரணில் விக்கிரமசிங்: இலங்கையின் அலட்சியம்; நேரடி ரிப்போர்ட்

0
54
நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் முன்னாள் பிரதமர் ரணில் விகிரமசிங் திரும்பவும் பிரதமர் ஆகிவிட்டார். இவர் பிரதமர் ஆகுவதற்கு இந்திய, ஜப்பான் லாபிகள் தான் காரணம் .மேலும் ராஜபட்சசேவா , ரணில் விகிராம்சிங் ,சந்திரிகா குமாரதுங்கவோ என யார் வந்தாலும் தமிழர்களுக்கு செய்த துரோகத்தை மறந்து விட முடியுமா? இவர்கள் தமிழர்களுக்கு என்னென்ன கொடுமைகள் செய்துள்ளார் என்பதைக மறக்கா முடியுமா?

ரணில் விக்கிரமச்சிங்:

நல்லாட்சி காலத்திலும் கூட ரணில் விக்கிரமசிங் ‘ரணில் ராஜபட்ச’ வாகவே இருந்தார் என்பது தமிழ் தரப்பு புரிந்து கொள்ளவில்லை. நல்லாட்சி காலத்திலும் கூட ரணில் விக்கிரமசிங் தமிழர்களுக்கு எதிரான பொறுப்பு கூறல் செயல் முறையின் சர்வதேச பரிணாமத்தையே முடிவிற்கு கொண்டு வந்திருந்தார்.

ரஜாபட்ச காலத்தில் மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோத குற்றங்களுக்கு காணி உரிமை பத்திரங்களை பெற்று கொடுத்து சட்டவிரோத குற்றங்களை சட்டபூர்வமாக்கினார். பயங்கீரவாத தடை சட்டத்தை முழுமையாக நீக்க வேண்டும் என்கிற தமிழ் சமூகத்தின் கோரிக்கையை திட்டமிட்டு மலினப்படுத்தினார்.

மேலும் இவர் விவசாய பண்ணை மீதான ராணுவ ஆக்கிரமிப்பு குறித்தோ அல்லது முன் பள்ளி கட்டமைப்பை சீரமைத்து வரும் ராணுவ கட் டமைப்புகள் குறித்தோ அக்கறை செலுத்த மறுத்தார்.ரணில் விகிரமசிங்க்கு எதிராக பேசுவோர் ராஜபட்ச விசுவாசிகளாக சித்தரிக்கப்பட்டார்கள். இனியாவது இந்த நிலை தொடரக்கூடாது. பிரதான தரப்புகள் எல்லாமே சிங்களா பொளத்த மேலாண்மை கருத்தியலை முன்னிறுத்துபவை என்கிற அடிப்படையில் தமிழ் அரசியலை முன்னெடுக்கப்பட வேண்டும்

இலங்கையில் விவசாயத்தில் ஏற்பட்ட பாதிப்பு:

அரசங்கம் இயற்கை உரங்களை பயன்படுத்த வேண்டும் என்று அறிவித்தபோது எல்லா விவசாய்களிடமும் இயற்கை உரங்கள் கிடையாது. வெளிநாடுகளிலிருந்து தான் வாங்க வேண்டியிருந்தது. ஆனால் எல்லா விவசாயிகளும் கொடுக்கும் அளவுக்கு யாரிடமும் இயற்கை உரங்களும் இல்லை. இதனால் விவசாயிகள் தங்களின் பயிர்களுக்கு தேவவையான தருணத்தில் பசலைகளை போடா இயலாத நிலைக்கு தள்ளப்பட்டார்கள் .எனவே இலங்கை அரசின் இந்த முடிவுஇலங்கையின் விவசாயத்தில் பல விளைவுகளை ஏற்படுத்தியது.

இந்தியர்களின் நிலை:

இந்தியா ஏதோ தமிழர்களின் நாடு என்றகோணத்திலேயே சித்தரிக்கப்பட்டன. ஏமாற்றங்களும் நடத்தப்பட்டன. இந்தியர்களின் முகத்தில் கரி பூசிய சம்பவம் ஏராளம். இப்படியொரு வரலாற்றை வைத்துக்கொண்டு வடகிழக்கில் தமிழக முதலீடுகளுக்கு இலங்கை இடமளிக்குமா?

சர்வதேச விமானங்கள் மூடப்படுத்தல்:

மேலும் நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியை முன்னிட்டு விமான நிலையங்கள் மூடுவதாகவும் தீர்மானிக்கப்பட்டன .இந்தியாவிற்கு செல்லும் பயணிகள் கொழும்பு சென்று அங்கிருந்து இந்தியா வருவதற்கு
வாயுப்புகள் குறைந்தே காணப்பட்டன .இந்நிலையில் விமானநிலையம் தற்போது மூடப்படுவதாக தீர்மானிக்கப்பட்டது .மேலும் இந்திய வழங்கிய நிதி உதவிக்காக தமிழக முதலீடுகளுக்கு இலங்கிகை அனுமதியளிக்கும் என்று வார்த்தையால் சொல்ல முடியும். இங்க்கை இதனை செயல் படுத்தாது என்பதற்கு பல காரணங்கள் உண்டு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here