ரெட்மி நிறுவனத்தின் 50 எம்பி ரியர் கேமரா ஸ்மார்ட்போன்

0
47

புதிய ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போனை சியோமி நிறுவனத்தின் துணை நிறுவனமான ரெட்மி சமீபத்தில் அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன் சிறப்பான அம்சத்திலும் பட்ஜெட் விலையிலும் வெளிவந்துள்ளது.வரும் செப்டம்பர் 7ம் தேதி இந்த ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போன் விற்பனை செய்யப்படும் என்று தெரியவருகிறது.

ரெட்மியின் அம்சங்கள்

ரெட்மி 10 பிரைம் 6.5- இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே உள்ளதால், வீடியோ கேம் உள்ளிட்ட வசதிகளுக்கு மிக அருமையாக பயன்படுத்தலாம். 1,080×2,400 பிக்சல், 20:9 என்ற திரைவிகிதம், கார்னிங் கொரில்லா கிளாஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் போன்ற அம்சங்களை கொண்டுள்ளது. இதன் டிஸ்பிளே வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது தெரிகிறது.

மெமரி வசதி , நிறங்கள்

ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போனில் 4ஜிபி/6ஜிபி ரேம் உள்ளது. இதில் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. Astral White, Bifrost White , Phantom Black நிறங்கள் இந்த ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போனில் உள்ளது.

கேமரா அமைப்பு

ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போனின் கேமரா பின்புறம் 50எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் என நான்கு கேமராக்கள் உள்ளன. இரவு நேரங்களில் கூட மிகத் துல்லியமாக இந்த கேமராக்கள் உதவியுடன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.
இதில் 8எம்பி செல்பீ கேமரா வசதி உள்ளது. ஆனால் இதற்கு பதிலாக 13எம்பி , 16எம்பி செல்பீ கேமராக்கள் இடம்பெற்றிருந்தால் அருமையாக இருக்கும்.

சிப்செட் வசதி

ரெட்மி 10 பிரைம் சாதனத்தில் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி88 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளதால், சிப்செட் வசதி இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போன் எம்ஐயூஐ 12.5 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை கொண்டுள்ளது.

சென்சார் அமைப்பு

ரெட்மி 10 பிரைம் ஆக்ஸிலரோமீட்டர், ஆம்பியண்ட் லைட், மேக்னடோமீட்டர், ப்ராக்ஸிமிட்டி போன்ற சென்சார்களை கொண்டுள்ளது. பக்கவாட்டில் பிங்கர் பிரிண்ட் சென்சார் உள்ளது.

சார்ஜிங் கேபாஸிட்டி

குறிப்பாக 4ஜி எல்டிஇ, வைஃபை 802.11, ப்ளூடூத் வி5.1,ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது. இதில் 10W ஃபாஸ்ட் சார்ஜிங்அமைப்பு மற்றும் 9W வரை ரிவர்ஸ் சார்ஜிங் அமைப்பு உள்ளது.

விலை மதிப்பு

4ஜிபி ரேம் , 64ஜிபி கொண்ட போனின் விலைரூ.12,499-ஆக உள்ளது. 6ஜிபி ரேம் வேரியண்ட் ரூ.14,499-விலையில் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here