5 ஆண்டுகளில் ரூ.14 லட்சம் – எஸ்சிஎஸ்எஸ் திட்டம்

0
32

கொரோனாவிற்கு பிறகு மக்களிடத்தில் சேமிப்பு, முதலீடுகள் அதிகரிக்க தொடங்கியுள்ளது. செலவுகள் குறைந்துள்ளதாகவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்தியாவசிய பொருள்களை தவிர மற்ற செலவுகளுக்கு மக்கள் யோசிக்க தொடங்கியுள்ளனர். முதுமை காலங்களில் பிரச்சனைகள் இல்லாமல் இருக்க வேண்டும் என்பது பலரின் எண்ணங்கள். நிதி ரீதியாக பலம் வாய்ந்தவர்களாக இருந்தாலே முதுமை காலத்தில் ஓரளவுக்கு பிரச்சனைகள் குறைய வாய்ப்புள்ளது.

சிறப்பான திட்டம்

இன்றைய காலகட்டத்தில் இதற்காக பல திட்டங்கள் வந்துள்ளது. மூத்த குடிமக்களுக்கு பல சலுகைகள் இதில் வழங்கப்படுகிறது. கிராமப்புறங்களிலும், நகரங்களிலும் அதிகம் விரும்புவது அஞ்சலக திட்டம் தான். மூத்த குடிமக்களுக்கு என சிறப்பான திட்டம் scss திட்டம் ஆகும்.

நிபந்தனை

இந்த திட்டம் அஞ்சலக திட்டம் என்பதால் மிக பாதுகாப்பானதாக உள்ளது. 60 ,அதற்கு மேற்பட்டவர்களுக்கு மிகச்சிறந்த திட்டமாக இது உள்ளது. ஓய்வூதிய சலுகைகள் கிடைத்த ஒரு மாதத்திற்குள் கணக்கை திறக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனை உண்டு.

55 – 60 வயது

இந்த சேமிப்பு திட்டத்தில் 55 – 60 வயது அதற்கு மேற்பட்டவர்கள் சேரலாம். 50 வயதுக்கு மேற்பட்ட ஓய்வுபெற்ற பாதுகாப்பு பணியாளார்கள் இந்த சேமிப்பு திட்டத்தில் இணையலாம்.

முதலீடு

1000 ரூபாய் முதல் 15 லட்சம் வரையில் முதலீடு செய்யலாம். பணியில் ஓய்வுபெற்றபோது பெறப்பட்ட தொகைக்கு மேல் இருக்கக் கூடாது. இந்த பணம் கணக்கில் வைப்புத்தொகையாக எடுத்துக் கொள்ளப்படும்.

வட்டி

இந்த திட்டத்தில் ஆண்டுக்கு ஒரு முறை அரசு வட்டியை மாற்றியமைக்கிறது. சில ஆண்டுகளாகவே வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை.வட்டி விகிதமானது 7.40% ஆகும். இந்த திட்டம் மூலம் நல்லதொரு வருவாயினை ஓய்வூகாலத்தில் பெற முடியும்.

மூன்று ஆண்டுகள்

இந்த திட்டத்தின் முதிர்வுகாலம் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்க முடியும். முன் கூட்டியே கணக்கினை முடித்துக் கொள்ளவும் வழி இதில் உண்டு எனினும் ஒரு வருடத்திற்கு பிறகு தான் அனுமதிக்கப்படுகிறது. இதற்கு கட்டணமும் உண்டு.

படிவம்

இந்த சேமிப்பு திட்டத்தில் வரி சலுகைகளும் உண்டு. இந்த திட்டத்தில் வரி விலக்கு கோர வாய்ப்புள்ளது. இந்த வைப்பு தொகையின் மூலம் ஈட்டப்பட்ட வட்டி வரி விதிக்கப்படக்கூடியது தான். டிடிஎஸ்ஸூம் பிடித்தம் இதில் செய்யப்படும். வரி விதிக்கப்பட்டால் 15h படிவத்தை வழங்க வேண்டும்.

வங்கி

இந்த சேமிப்பு சில தனியார் வங்கிகளிலும் வழங்கப்படுகிறது. வயதான காலத்தில் யாரையும் சாராமல் வாழ இது பயன்படும்.

ரூ .14 லட்சம்

நீங்கள் ஓய்வுபெற்ற தொகையில் 10 லட்சம் ரூபாயினை முதலீடு செய்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். 5 ஆண்டுகள் முடிந்து 14,28,964 ரூபாயாக இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here